மக்களே உஷார்... எவ்வளவு பசியில் இருந்தாலும் கூட மதியம் இந்த மாதிரி உணவுகளை சாப்பிடாதீங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 11, 2024, 11:28 AM IST

Foods To Avoid At Lunch : நாம் ஆரோக்கியமாக இருக்க மதியம் சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடல் மோசமான பாதிக்கப்படும். ஆகவே காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும்.

ஆனால், நம்மில் பலர் மதிய உணவிற்கு கிடக்கிறதை சாப்பிடுகிறார்கள். ஆனால், இப்படி தொடர்ந்து சாப்பிடுவது உடலை உள்ளே இருந்து சேதப்படுத்த தொடங்குகிறது. எனவே, மதிய உணவின் போது தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Tap to resize

Latest Videos

மதிய உணவில் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்:

வறுத்த உணவுகள்:

பெரும்பாலானோர் வேலைக்கு செல்லும்போது லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்லாத போது, வெளியில் வருத்த உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், அது செரிமான ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். எனவே, வறுத்த உணவே சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் சாமத்தை சமைத்த உணவை சாப்பிடுங்கள். ஒருவேளை
எதுவும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பழங்கள் அல்லது ஆரோக்கியமான ஏதாவது ஒன்றை சாப்பிடுங்கள்.

இரவு மிஞ்சியது:

மதிய உணவில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுங்கள்.இரவில் எஞ்சிய உணவை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. மீறினால், வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் வயிறு உபாதைகள் ஏற்படும்.

சூப் அல்லது சாலட்:

சிலர் மதிய உணவுக்கு சூப் அல்லது சாலட் மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால், இப்படி சாப்பிடுவது தவறு. மதிய உணவில் எப்போதும் சரிவிகித உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். சூப் அல்லது சாலட் சாப்பிட்டால், மாலையில் சில ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பழங்கள்:

தினமும் மதிய வேளையில் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் பழங்களை சாப்பிடலாம். அது நல்லது. மேலும் பழங்களை மதிய உணவாக சாப்பிட்டால், அது உங்கள் செரிமான அமைப்பை கெடுக்கும் தெரியுமா..

சாண்ட்விச் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகள்:

நீங்கள் மதிய உணவாக ஒருபோதும் சாண்ட்விச் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது. இவை ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும்.

பீட்சா அல்லது பாஸ்தா:

மதிய உணவாக பீட்சா அல்லது பாஸ்தா சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் மற்றும் உடல் எடையும் வேகமாக அதிகரிக்க செய்யும்.

click me!