சுவை பட்டியலில் மோசமானதாக மதிப்பிடப்பட்ட ''கஞ்சி'' உண்மையில் சூப்பர் உணவு! ஊட்டச்சுத்துகளின் பொக்கிஷம் கஞ்சி!

By Dinesh TG  |  First Published Jul 10, 2024, 3:54 PM IST

தமிழ்நாட்டில், தமிழில் கஞ்சி என்று அழைப்படும உணவு, மற்ற மாநிலங்களில் பாண்ட பாத், பகாலா, போயிட்டா பாத், பாசியா பாத் என்று வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் சுவைப் பட்டியலில் மோசமாக மதிப்பிடப்பட்ட இந்த கஞ்சி உண்மையில் ஒரு சூப்பர் ஃபுட் என வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 


ஆஸ்திரேலியாவின் MasterChef சீசன் 13-இன் இறுதிப் போட்டியில், இந்தியாவிலிருந்து ஒரு நல்ல உணவு மற்ற உணவு வகைகளுக்கு எதிராகப் போட்டியிட்டது. உணவை ருசித்த ஆஸ்திரேலியா MasterChef நீதிபதி மெலிசா லியோங், இது சக்தி வாய்ந்த உணவு. இது மிகவும் எளிமையான உணவானாலும், இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இது சுவையில் அலாதியானது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு, கஞ்சியுடன், உருளைக்கிழங்கு மாஷ் மற்றும் வறுத்த மீனும் வழங்கப்பட்டது.

கஞ்சி பல்வேறு மொழிகளில்!

மிச்சமான அரசி சாதம், ஓர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைப்பதை தமிழ்நாட்டில் தமிழில் கஞ்சி, வங்காளத்தில் பான்டா பாத் என்றும், ஒடிசாவில் பகாலா என்றும், அசாமில் போயிட்டா பாத் என்றும், பீகார் மற்றும் ஜார்கண்டில் பாசியா பாத் என்றும் அழைக்கப்படுகிறது. காலை உணவுவாக ரொட்டி, இட்லி, தோசை போன்றவை அறியப்படுவதற்கு முன்பு கஞ்சியே பிரதான உணவாக இருந்து வந்தது.

இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்கள் எவை தெரியுமா? டாப் 5 லிஸ்டில் தமிழ்நாடு இருக்கு

டேஸ்ட் அட்லஸ் பட்டியல்

துரதிர்ஷ்டவசமாக, ஒரு வளமான கலாச்சார வரலாறு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவான கஞ்சி, சுவைகளின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டேஸ்ட் அட்லஸின் "மோசமான மதிப்பீடு" பட்டியலில் இடம்பெற்றது. அதனுடன், உப்மா மற்றும் ஆக்ரா பேத்தா போன்ற மற்ற இந்திய உணவு வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கஞ்சி என்றால் என்ன?

கஞ்சி என்ற எளிமையான உணவு, ஆடம்பரத்திற்காக அல்ல, பயன்பாட்டுத் தேவையால் பிறந்த ஓர் அற்புத உணவு. நீண்ட காலமாக அரிசி உட்கொள்ளும் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பொதுவான உணவாக கஞ்சி இருந்து வருகிறது.

கோடைக் காலங்களில் பலதரப்பட்ட மக்களையும் கவரும் ஓர் அமுத உணவாகவே கஞ்சி மாறியுள்ளது. லேசான புளிக்கரைசப்பட்ட அரிசி உணவான கஞ்சி, ஒரு வெங்காயம் அல்லது பச்சை மிளகாயுடன் உணவாக எடுத்துகொள்ளப்படுகிறது.

ஒரு காலத்தில், கோதுமை அதிக அளவில் கிடைத்ததால் ரொட்டிகள், பராட்டாக்கள் மற்றும் பூரிகளின் பிரபலம் அதிகரிக்க கஞ்சி உணவு அவ்வப்போது உண்ணும் உணவாக மாற்றியது.

Latest Videos

undefined

வித்தியாசமான சுவையில் சத்தான புதினா கொத்தமல்லி தோசை.. ரெசிபி இதோ..!

சூப்பர் ஃபுட் - கஞ்சி!

எளிமையான உணவானாலும், கஞ்சி உண்மையில் ஒரு சூப்பர்ஃபுட் என மருத்துவ வல்லுனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். சாதாரண வேகவைத்த அரிசியுடன் ஒப்பிடும்போது, ​​கஞ்சியில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 100 கிராம் சமைத்த அரிசியில் 3.4 மில்லிகிராம் இரும்பு மட்டுமே உள்ளது, அதே அளவு 12 மணி நேரம் புளிக்கவைக்கப்பட்ட கஞ்சியில், இரும்புச் சத்து 73.91 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல, சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் 12 மணி நேர நொதித்தலுக்குப் பிறகு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!

click me!