Relationship Advice : பெண்களுக்கு பாலுறவில் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் ஈடுபாடும், சுறுசுறுப்பும் இருக்காது என சொல்லப்படுவது உண்மையா? அதன் பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு பாலுறவில் இருக்கும் ஈடுபாடு குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. பெண்கள் பாலியல் உறவில் அவ்வளவாக விருப்பம் கொள்ளமாட்டார்கள் என்று சொல்வோரும் உண்டு. அந்த வகையில் வாசகி ஒருவர் கேட்கும் கேள்விக்கு இங்கு விடை காணலாம்.
" எனக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடைய வயது 38 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வயது ஏற ஏற வீட்டு வேலைகள், அலுவலக வேலைகளால் நான் உடல் அளவில் சோர்வாக காணப்படுகிறேன். பெண் என்பதால் என்னுடைய வேலை பளு அதிகமாக தான் உள்ளது. என்னுடைய தோழிகளில் சிலர் 35 வயதை கடக்கும் பெண்கள் பெரும்பாலும் பாலுறவில் சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படுவார்கள் என சொல்கின்றனர்.
undefined
இன்றைய காலகட்டத்தில் 35 வயதுக்கு மேலே அநேக பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடுவதாகவ என்னுடைய திருமணமான தோழிகள் சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த தகவல்கள் உண்மையானதா அல்லது வெறும் கட்டுக்கதை தானா என்பது குறித்து தெளிவான விளக்கங்களை அளியுங்கள்"எனக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மாமனார் இப்படி ஒரு காரியம் பண்ணுவார்னு நினைக்கல' மாமியார்கிட்ட மறைக்கவும் முடியல..புலம்பும் பெண்ணுக்கு தீர்வு
நிபுணரின் தெளிவான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கையில் அன்பு, மரியாதை, காதல் இதையெல்லாம் தாண்டி 'செக்ஸ்' என்பது தான் கணவன் மனைவிக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இது வெறும் சிற்றின்பமாக மட்டும் இல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது. மன மற்றும் உடல் ரீதியாக நமக்கு பல நன்மைகளை உடலுறவு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஆனால் பெண்களில் சிலருக்கு உடலுறவு குறித்த விழிப்புணர்வு இல்லை. குழந்தைகள் பெற்ற பிறகு அவர்கள் உடலுறவு போட்டு விடுகின்றனர். உடலுறவு குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் அல்ல என்பது குறித்து அறிந்து கொள்வது முக்கியமானது. திருமண வாழ்க்கை சலிப்பில்லாமல் வாழ்வதற்கு செக்ஸ் முக்கிய காரணமாக இருக்கிறது. திருமணமான புதிதில் ஆண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். அதே சமயத்தில் பெண்கள் ஆர்வம் குறைவாக காணப்படுவார்கள். இதனால் தான் நாளடைவில் அவர்களுக்கு இடையேயான உடல்ரீதியான தொடர்பு இல்லாமலே போகிறது. இப்படி உடலுறவில் ஆர்வம் காட்டாத பெண்களுக்கு சீக்கிரமே மாதவிடாய் நின்றுவிட வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'என் மனைவி லெஸ்பியன்னு தோனுது.. அவர் பண்ற காரியங்கள் அப்படி இருக்கு' குழம்பும் வாசகருக்கு பதில்!!
உடலுறவு குறித்த ஒரு ஆய்வின்படி, 35 வயதுக்கு அதிகமான செக்ஸ் ஆர்வம் இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் முன்பே நின்றுவிடும். ஆனால் அடிக்கடி உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு தொடக்க கால மாதவிடாய் நிறுத்தம் ஏற்படாது. இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால், மாதம் ஒரு தடவை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களை காட்டிலும் வாரத்திற்கு ஒரு தடவை உடலுறவு ஏற்படும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் வாய்ப்பானது 28% குறைவாக உள்ளதாக ஆய்வுகள் விளக்குகின்றன.
உடலுறவு கொள்ளாத 35 வயதுக்கு அதிகமுள்ள பெண்களுக்கு அவர்களின் உடல்களில் முன்கூட்டியே அண்டவிடுப்பு நிறுத்த அறிகுறிகள் தென்படுகின்றன. ஆகவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும். இனப்பெருக்கத்திற்கு இனி கருமுட்டைகள் அவசியமில்லை என உடலுக்கு சிக்னல் கொடுக்கப்படுகிறது. இந்த சிக்னலால் அண்டவிடுப்பு நிறுத்தம் மற்றும் மாதவிடாய் ஏற்படுகிறது.
அண்டவிடுப்பினால் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. உங்களுக்கு மெனோபாஸ் விரைவில் ஏற்படுவதை நீங்கள் விரும்பாவிட்டால் உடலுறவில் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். இதுவே உங்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதை தடுக்கும். தம்பதிகள் உடலுறவில் அவ்வப்போது ஈடுபடுவது கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஆகவே கவனமாக இருங்கள். நெருக்கமாக இருங்கள். நலம் வாழுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D