Worst Breakfast Foods : நீங்கள் காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்களை முழு ஆற்றலுடன் அப்படியே வைத்திருக்கும். மாறாக, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டால் அது முழு நாளையும் கெடுத்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நம் அனைவருக்கும் காலை நேரம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது ஒரு புதிய நாளின் தொடக்கமாகும். மேலும் இது நம் முழுமையும் சார்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் நாளை ஒரு நல்ல குறிப்பு தொடங்க முயற்சி செய்வதற்கு முக்கிய காரணம் இதுவே. ஒரு நல்ல நாளை தொடங்க நல்ல காலை உணவு மிகவும் அவசியம். காலையில் எதை சாப்பிட்டாலும் அதன்படியே நமது நாள் முழுவதும் அப்படியே கழிகிறது.
எப்படியெனில், நீங்கள் காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்களை முழு ஆற்றலுடன் அப்படியே வைத்திருக்கும். மாறாக, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டால் அது முழு நாளையும் கெடுத்துவிடும். அத்தகைய சூழ்நிலையில், காலை உணவாக எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே, இன்றைய கட்டுரையில் உங்கள் நாளை தொடங்குவதற்கு சாப்பிட கூடாத சில உணவுகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
காலையில் சாப்பிட கூடாத உணவுகள்:
பழ ஜூஸ்:
காலையில் பழ ஜூஸ் குடிப்பது நல்லது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு. உண்மையில், பழ ஜூஸில் நார்ச்சத்து இல்லை. எனவே, காலையில் இதை முதலில் குடித்தால் உங்களது இரத்த அளவு அதிகரிக்கும். இதனால், நீரிழிவு மற்றும் வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனவே, இதை குடிப்பதற்கு பதிலாக, நீங்கள் எலுமிச்சை தண்ணீர், வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றை குடித்து உங்கள் நாளை ஆரம்பிக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் காலையில எவ்வளவு நேரம் ஜாக்கிங் பண்ணனும் தெரியுமா..?
பேன்கேக் மற்றும் வேஃபில்ஸ்:
பெரும்பாலான மக்கள் அவசரத்தில் காலை உணவாக இதை சாப்பிட விரும்புகிறார்கள். காரணம் அவை விரைவாக தயாரிக்கவும், வசதியாகவும் இருக்கும் என்பதால் தான். இருப்பினும், உங்கள் நாளை தொடங்க இது ஒரு நல்ல உணவு அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், காலையில் இவற்றை சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்படும். மேலும், இது உங்கள் ஆற்றலை முற்றிலும் குறைக்கும்.
டீ:
நம்மில் பெரும்பாலானோர் காலையில் ஒரு கப் டீயுடன் தங்கள் நாளை தொடங்க விரும்புகிறார்கள். காலையில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சில சமயங்களில் அது இல்லாமல் அசெளகரியமாக உணர ஆரம்பிக்கிறார்கள். இருப்பினும், உங்கள் நாளை தொடங்குவது மிகவும் மோசமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் குடித்து வந்தால் உடல்நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இதன் காரணமாக உங்களுக்கு அமிலத்தன்மை, வயிற்று பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: தினமும் காலை 5 மணி எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
தானியங்கள்:
தானியங்கள் பலரது காலையில் உணவின் ஒரு பகுதியாகும். மேலும் காலை உணவுக்கு இது ஒரு ஆரோக்கியமானது என்றும் பலரும் நம்புகிறார்கள். இருப்பினும், இது முற்றிலும் தவறு. அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இல்லாததால் உங்கள் காலை உணவாக இதை தொடங்குவது மோசமான தேர்வு என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
காபி:
தினமும் காலை ஒரு கப் டீயுடன் நாளை தொடங்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களது இந்த பழக்கத்தை உடனே நிறுத்தி விடுங்கள். ஏனெனில், காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், இது ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கும். அதுபோல, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் இது வழிவகுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், காலை எழுந்தவுடன் காபி குடிப்பதை விட காலை உணவுக்குப் பிறகு காபி குடிக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D