ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில், நேற்று அம்பானி மற்றும் மெர்ச்சண்ட் குடும்பத்தினர் கிரஹ சாந்தி பூஜையை நடத்தினர்..
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில், நேற்று அம்பானி மற்றும் மெர்ச்சண்ட் குடும்பத்தினர் கிரஹ சாந்தி பூஜையை நடத்தினர்.. தங்கள் குலதெய்வத்தின் அருளை பெறவும், 9 கிரகங்களின் சக்தியை சமநிலைப்படுத்தவும் நடத்தப்படுகிறது.
மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கைக்காக பிரார்த்திக்க கிரஹ சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி ஆனந்த் - ராதிகா இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வேண்டும் என்பதற்காக நேற்று இந்த பூஜை நடத்தப்பட்டது. இந்த இந்த பூஜை தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆனந்த் - ராதிகா ஜோடி ஆரத்தி எடுக்கப்படுவது முதல் நீதா அம்பானி ராதிகாவை ஆசீர்வாதம் செய்வது வரை பல காட்சிகளை பார்க்க முடிகிறது. மேலும் ராதிகா, ஆனந்த் மற்றும் முகேஷ் அம்பானியின் சந்தோஷத்தையும் கண்களில் பார்க்க முடிகிறது. மேலும் பூஜை முடிந்த உடன் ஆனந்திற்கு மாலை அணிவிக்கும் ராதிகா அவரை க்யூட்டாக கட்டி அணைக்கிறார்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டங்கள் கடந்த வாரமே தொடங்கியது. சங்கீத், ஹல்தி என அடுத்தடுத்து பல்வேறு விழாக்களை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர். இந்த விழாவில் சல்மான் கான், ஆலியா பட், ரன்பீர் கபூர், மௌனி ராய், திஷா பதானி, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில்துறை தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. ஷாருக்கான், சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், அமிதாப் பச்சன், பிரியங்கா சோபரா ரன்பீர் கபூர், ஆலியா பட், அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, ஷாஹித் கபூர், விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங் ஹீ, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன் மற்றும் ஜான் செனா உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களும் ஆனந்த் - ராதிகா திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.