Beetroot Kulambu Recipe : பீட்ரூட்டில் சுவை என குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் மதியம் ஒரே மாதிரியான குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? இன்று மதியம் வித்தியாசமான சுவையில் ஏதாவது குழம்பு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்கள் வீட்டில் பீட்ரூட் இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான குழம்பு செய்து சாப்பிடுங்கள். பொதுவாகவே நாம் பீட்ரூட்டில் பொரியல், கூட்டு என்றுதான் சாப்பிட்டு இருப்போம். ஆனால், சற்று வித்தியாசமான சுவையில், சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த பீட்ரூட் குழம்பு. முக்கியமாக இந்த பீட்ரூட் குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த குழம்பு செய்து கொடுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்ல காய்கறி இல்லனா காராமணி குழம்பு செய்ங்க.. ருசியா இருக்கும்!
பீட்ரூட் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
பீட்ருட் - 2 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 2
சாம்பார் பவுடர் - 2 ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க...
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 3/4 ஸ்பூன்
உளுந்து - 3/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
இதையும் படிங்க: மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை :
பீட்ரூட் குழம்பு செய்ய முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட், பச்சை மிளகாய் என ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் அதில் உப்பு சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அடுத்ததாக அதில் தேங்காய் பால் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடவும். இதனுடன் தேவன் என்று தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்த இதனை இறக்கி வைத்த குழம்பில் ஊற்றவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பீட்ரூட் குழம்பு தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D