
உஷார்..! ATM -இல் ரூ.54 லட்சம் வரை மட்டுமே உள்ளது..உடனே பணத்தை எடுத்துக்கோங்க..
தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள்ளனர். இந்த நான்கு நாட்கள் வங்கிக்கும் விடுமுறை என்பதால்,ஏடிஎம்மில் பணம் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.
வரும் 29ஆம் தேதி ஆயுத பூஜை, 30ஆம் தேதி விஜயதசமி, அக்-1 ஆம் தேதி ஞாயிறு, அக்., 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருகிறது.
மேலும் இது போன்ற சமயத்தில் மக்கள் பணம் இல்லாமல் அவதி படுவதை தடுக்க, மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், தேவையான பணத்தை முன்கூட்டியே ஏடிஎம்மில் நிரப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளது. அதே வேளையில், இது குறித்து ரிசரவ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, ஏடிஎம்களில் ரூ.54 லட்சம் வரை நிரப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதேபோல் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கும் போது,ஏடிஎம்களை மட்டுமே நம்பி இருக்காமல்,முன்னரே வங்கிகளுக்கு சென்று தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.