
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.அவ்வாறு வெளியேறிய காயத்ரி ரகுராம் பிக் பாஸ் பற்றி டிவிட்டரில் எழுதியுள்ளார்.அதில்,
என்னை வெறுப்பவர்கள், நான் சாக வேண்டும் என்று விரும்புகிறார்கள், நான் ப்ளூவேல் கேம் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள்... அமைதி அமைதி. ரொம்பவும் கோபப்படாதீங்க. உங்க கோவம் என்னை விட மோசமாக இருக்கு. நல்ல மகிழ்ச்சியா இருங்க...
இது ஒரு நடிப்பு நிகழ்ச்சி. இதை பெர்சனலா எடுத்துக்காதீங்க. எது நடந்தாலும், அது, எனக்கும் போட்டியாளர்களுக்கும் இடையிலானது மட்டுமே! நாம் எல்லோருமே 24:7ல்தான் இருந்தோம்...
இந்த கேம் ஷோ, ஒருவரின் கேரக்டர் பற்றி நாம் தீர்மானிக்கக் கூடிய நிகழ்ச்சி அல்ல. இது அந்த வீட்டில் எவர் ஒருவர் தங்கியிருக்கிறார்களோ அவரைப் பற்றியது. அவர்களுக்குக் கொடுக்கும் டாஸ்க்கை சரியாக எவரால் செய்ய முடிகிறதோ அதுபற்றியது என்று கூறியுள்ளார்.
இதனிடையே, அவரது டிவிட்டருக்கு ரசிகர்கள் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதில், ஏன் இதை எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்கிறீங்க என்று ஒருவர்...
டாஸ்க்ல கெட்ட வார்த்த பேச சொல்லி சொல்றாங்களா மேடம்
உங்க கேரக்டர் கேவலமா இருந்ததால் இப்படி எல்லாம் பீலா விடக் கூடாது... என்று ஒருவர்...
//
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்தவுடன், காயத்ரி ரகுராமின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை,அவர் கூறி வரும் கருத்தை வைத்தே தெரிந்துக்கொள்ளலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.