அடேங்கப்பா.. யோகா செய்தால் இவ்வளவு நன்மைகளா?

Published : Jun 21, 2023, 12:18 PM ISTUpdated : Jun 21, 2023, 12:46 PM IST
அடேங்கப்பா.. யோகா செய்தால் இவ்வளவு நன்மைகளா?

சுருக்கம்

இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. இன்றைய பரபரப்பான, பிஸியான வாழ்க்கை முறையில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. 

யோகா பயிற்சி செய்வதன் மூலம் இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை  தள்ளிப்போடுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. 

இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. இன்றைய பரபரப்பான, பிஸியான வாழ்க்கை முறையில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. யோகா உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் யோகா கலை, அதோடு நின்று விடாமல் மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியை கொடுக்கிறது. போதிய தூக்கத்தைத் தருவதோடு சுவாச சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

இதுகுறித்து யோகா பயிற்சி தெரபிஷ்ட் பத்ம பிரியதர்ஷினி கூறுகையில்;- மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகப் பயணத்தில் மன அமைதி ஏற்படும்போதே, எண்ணக் கூட்டங்களின் துரத்தல்கள் குறையும்.  சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும். யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும்.

இதையும் படிங்க;- Yoga Day 2023 | நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை.. யோகாவால் இத்தனை நன்மைகளா?

நோய்களை அண்டவிடாமல் யோகா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை  தள்ளிப்போடுகிறது. உடலில், ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்டவிடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. யோகா என்பது உடலை, மனதை ஒருங்கிணைத்து, தன்கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப்புலன்களையும் ஆளுமைகொள்கிறது. முக்கியமாக முதுகு எலும்புகளின்  தண்டுவடம், அனைத்து எலும்புகளின் இணையும்இடங்கள், தசைகள் நீட்டிச்சுருங்கி, வலுவடைந்து, உடலில்எந்தவிதமான  வலிகள், வேதனைகள் இல்லாமல் வாழ உதவுகிறது. 

இதையும் படிங்க;- International Yoga Day 2023 | இந்த யோகா மட்டும் பண்ணுங்க உங்க மூட்டு வலி பறந்து போகும்!

கர்ப்பத்தின் போது சிறந்த உடலமைப்பை பெற யோகா செய்ய வேண்டும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் என யோகா பயிற்சி தெரபிஷ்ட் பத்ம பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kitchen Sink Cleaning Tips : வெறும் பேக்கிங் சோடா போதும்! இனி கிச்சன் சிங்கை கைவலி தேய்க்க வேண்டாம் 'ஈஸி' டிப்ஸ்
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?