வரலாறு, நாட்டுப்புறக் கதைகளில் வரும் உலகில் உள்ள வினோத தீவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் பழங்கால கதைகளில் சில தீவுகளை குறித்து கேள்விபட்டிருப்போம். அவற்றின் நில அமைப்பு, வாழ்வியல் முறை எல்லாம் நம்முடைய கற்பனைகளில் அப்படியே பதிந்திருக்கும். அதில் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவால் முதலில் குறிப்பிடப்பட்ட புகழ்பெற்ற தீவு 'அட்லாண்டிஸ்' ஒரு உதாரணமாகும். அவருடைய யுகத்தின்படி, அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் மறைந்த நாகரிகம். இதைப் போல குமரி கடலில் மூழ்கிய லெமுரியா கண்டத்தை குறித்த சில கதைகளை நாம் தெரிந்து கொண்டிருப்போம்.
பல ஆய்வுகளுக்கு பின்னரும் அட்லாண்டிஸ் ஒரு புராண தீவாகவே உள்ளது. அதன் தடயங்கள் கற்பனையாக மட்டுமே உள்ளது. இங்கு நாம் கற்பனை இல்லாமல் விசித்திரமான பண்புகளைக் கொண்ட உண்மையான தீவுகள் உலகில் உள்ளன. அப்படிப்பட்ட உலகின் ஐந்து விசித்திரமான தீவுகளை இங்கு காணலாம்.
சோகோட்ரா தீவு
அரேபிய கடலில் இருக்கும் சோகோத்ரா தீவு, பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பெயர் பெற்ற தீவு. இங்கு தனித்துவமான தாவரங்கள், விலங்கினங்கள் அதிகமாக உள்ளன. இங்குள்ள விலங்குகளும், தாவரங்களும் உலகின் வேறெந்த மூலையிலும் காணப்படவில்லை. இங்கு டிராகனின் பிளட் ட்ரீஸ் (dragon's blood trees), அசாதாரண காளான் வடிவ பாறைகள் காணப்படுகின்றன. இந்தத் தீவு ஏமன் கடற்கரையில் தொலைதூரமாக இருப்பதால், எளிதில் செல்ல முடியாததாக உள்ளது.
ஹஷிமா தீவு
ஜப்பானின் நாகசாகி கடற்கரையில் அமைந்துள்ள ஹஷிமா தீவை, கைவிடப்பட்ட பேய் நகரம் என்கிறார்கள். இது ஒரு காலத்தில் பரபரப்பான நிலக்கரி சுரங்க சமூகமாக இருந்தது.1970 களில் நிலக்கரி தொழில் வீழ்ச்சியடைந்தபோது அது அப்படியே கைவிடப்பட்டது. இன்று, இந்த தீவில் அழிந்து வரும் கட்டிடங்களும் வெற்று தெருக்களும் தான் உள்ளன. அங்கு வாழ்ந்த மக்களை நினைவூட்டும் வகையில் இந்தத் தீவு பழைமையாகவே உள்ளது. ஹஷிமா தீவு, குங்கன்ஜிமா அல்லது போர்க்கப்பல் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுகிறது. இப்போதும் இது சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தனுஷ்கோடியை போல, இடிபாடுகளை காணவே ஹஷிமா தீவுக்கு மக்கள் செல்கின்றனர்.
போவெக்லியா தீவு
இத்தாலியின் வெனிஸில் உள்ளது, போவெக்லியா (Poveglia) தீவு. இதை "உலகின் அதிக பேய்கள் நிறைந்த தீவு" என்றும் அழைக்கிறார்கள். இந்த சிறிய தீவு கடந்த காலங்களில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நிலையமாக பயன்படுத்தப்பட்டது. இது தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டதாக வதந்தி பரவுகிறது. இந்த தீவுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தைரியமான பார்வையாளர்கள் அருகிலுள்ள படகுகளில் இருந்து அதன் முன்னறிவிப்பை காணலாம்.
இதையும் படிங்க: கண்டிப்பாக ஒருமுறை சுவைத்து பார்க்க வேண்டிய உலகின் 10 வித்தியாசமான உணவுகள்!!
ஈஸ்டர் தீவு
தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஈஸ்டர் தீவு, மாபெரும் கற்சிலைகளுக்கு பெயர் போனது. இது மோவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பெரிய ஒற்றைக்கல் சிலைகள் தீவின் மீது காவலாக நிற்கின்றன. பல நூற்றாண்டுகளாக வரலாற்றாசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் இங்குள்ள சிலைகள் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இத்தீவின் கலச்சாரம், எரிமலை நிலப்பரப்புகளுக்கு தனி வரலாறு உண்டு.
பாம்பு தீவு
பிரேசிலின் கடற்கரையில் அமைந்துள்ள பாம்பு தீவை, இல்ஹா டா குயிமாடா கிராண்டே என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கிறார்கள். இந்த தீவில் கொடூர விஷயம் கொண்ட பாம்புகள் அதிகமு உள்ளன. கொடிய விஷமுள்ள தங்க ஈட்டி தலை பாம்புகள் ( golden lancehead snakes) அதிகம் காணப்படுவதால் இந்தத் தீவிற்கு செல்ல அனுமதி இல்லை. கற்பனை செய்து பாருங்கள்... கால் வைக்கும் இடமெல்லாம் பாம்புகள்... யார் தான் அங்கு செல்ல முடியும். அதனால் தான் பிரேசில் பாம்பு தீவுக்கு செல்ல அனுமதியில்லை.
இதையும் படிங்க: பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!