உங்கள் குடல் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும், 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் அல்லது மூளை செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர், மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த வழங்கல் தடைபடும் போது அல்லது மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடிக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது. பக்கவாதம் மூளையின் பாகங்களை சேதப்படுத்துவதால், நீண்ட கால இயலாமை அல்லது மரணம் கூட ஏற்படுகிறது. இந்த நிலையில் அழற்சி குடல் நோய் அல்லது IBD போன்ற செரிமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அது இல்லாதவர்களை விட பக்கவாதத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜியின் அதிகாரப்பூர்வ இதழான நியூராலஜியின் ஆன்லைன் பதிப்பில் ஆய்வின் கண்டுபிடிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. IBD மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற பிற சிக்கல்களை அனுபவிக்கும் நபர்களின் குடல்கள் நாள்பட்ட வீக்கமடைகின்றன. மேலும் அவர்கள் நோயறிதலுக்குப் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 13 சதவீதம் அதிகம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
அடிக்கடி தலைவலி மற்றும் உணர்வின்மை..இது மூளை கட்டியின் எச்சரிக்கை அறிகுறிகள்!
ஆய்வு ஆசிரியர் ஜியாங்வேய் சன் இதுகுறித்து பேசியிஅ போது "இந்த முடிவுகள் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் மருத்துவர்களும் இந்த நீண்ட கால அதிகரிப்பு ஆபத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.” என்று தெரிவித்தார்.
IBD பாதிக்கப்பட்டவர்கள் ஏன் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள்?
மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் (ischemic stroke) காரணமாகும், மாறாக இரத்தப்போக்கு பக்கவாதம், மூளையில் இரத்தப்போக்கு காரணமாக ஏற்படும் பக்கவாதம் ஆகும். இஸ்கிமிக் ஸ்ட்ரோக்1 என்பது பொதுவாக இரத்தக் கட்டிகளால் ஏற்படும் பொதுவான வகையாகும், இது மூளையில் உள்ள இரத்தக் குழாயைத் தடுக்கிறது அல்லது அடைக்கிறது. இது மூளைக்கு இரத்தம் பாய்வதைத் தடுக்கிறது, சில நிமிடங்களில் மூளை செல்களை அழிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு வலுப்படுத்துவது?
குடலில் உள்ள பாக்டீரியா வகை உட்பட பல காரணிகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, எப்போதும் சீரான உணவை உண்ண வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு, குடல் மற்றும் அதன் பாக்டீரியாவை அவற்றின் வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டும் ஆரோக்கியமான நுண்ணுயிரிக்கான ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாகும்.
நல்ல நார்ச்சத்துள்ள சில உணவுகள்:
ப்ரோக்கோலி
சுண்டல்
பருப்பு
பீன்ஸ்
முழு தானியங்கள்
வாழைப்பழம்
ஆப்பிள்