Anant Ambani Wedding : பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் சுமார் 2500 வகையான பல்வேறு நாடுகளை சேர்ந்த உணவுகள் இடம்பெற்றுள்ளது.
உலகே மெச்சும் அளவிற்கு, தனது இளைய மகனின் திருமணத்தை நடத்தி வருகின்றார் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. கடந்த ஓராண்டுக்கு முன் இந்த ஜோடிக்கு நிச்சயம் முடிந்த நாளிலிருந்தே, தொடர்ச்சியாக பல விஷேஷ நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று ஆனந்த், ராதிகா திருமணம் நடக்கும் நிலையில், வந்துள்ள விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உள்ளடக்கிய மெகா விருந்து, திருமண விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் தனது மகனின் திருமணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற முகேஷ் அம்பானி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் என்றே கூறலாம்.
இன்று விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகளில், நீதா அம்பானிக்கு மிகவும் பிடித்த "காஷியின் சாட்" என்ற நிறுவனத்தின் பல உயர்தர உணவுகள் இடம்பெற்றுள்ளது. அண்மையில் வாரணாசிக்கு சென்ற நீதா அம்பானி, அங்குள்ள "Tamatar Ki Chaat" என்ற உணவகத்தில் பலவிதமான உணவுகளை சுவைத்துள்ளார். ஆகவே அந்த நிறுவனத்தின் உயர்தர உணவுகள் அனைத்தும் தற்போது ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் கூட இதில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கும்பகோணம் டிகிரி காபி, மெட்ராஸ் டிகிரி காபி என்று அழைக்கப்படும் காபியும் இந்த மெனுவில் உள்ளது. அது தவிர பாணி பூரி, ரஹீம் பல்லா, மிக்ஸ்டு சாட், தாகி புரி, சன்னா கச்சேரி போன்ற சாட் உணவுகளும், இன்னும் பல உயர்தர உணவு வகைகளும் விருந்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களை கவனிக்க, பிரத்தியேகமாக இந்துவோனேசியாவில் இருந்து உணவு சமைப்பவர்களை இந்தியா அழைத்து வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. குறிப்பாக நூற்றுக்கும் அதிகமான வகையிலான உணவுகள், தேங்காயை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.