Soaked Figs Health Benefits : இந்த கட்டுரையில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பழங்கள் பல நோய்களை தடுப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த பழங்களில் ஒன்றுதான் அத்திப்பழம். அத்திப்பழம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அத்திப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அத்திப்பழம் ஒரு அற்புதமான பழம். நிச்சயமாக இது விலை உயர்ந்தது ஆனால், இது எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குறிப்பாக ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக, நீங்கள் அதிக கொலஸ்ட்ரால அவதிப்படுகிறீர்கள் என்றால், பாலில் அத்திப்பழம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம். இது அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதிப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. பாலில் கொதிக்கும் போது அது மிகவும் ஆரோக்கியமான முறையில் உடலுக்குள் செல்கின்றது. பாலுடன் அத்திப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் குடலை சுத்தப்படுத்தும்.
அதுமட்டுமின்றி, இந்த பழம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள பல ஹார்மோன் பிரச்சனை, வயிற்று பிரச்சனை, இதய பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் சர்க்கரை பிரச்சனை என இது போன்ற பல பிரச்சினைளையும் இந்த பழம் தீர்க்க உதவுகிறது. குறிப்பாக, ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவது தான் நல்லது. எனவே, இந்த கட்டுரையில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தினமும் காலை ஒரு கிளாஸ் அத்திப்பழம்பால் குடிங்க.. உடலில் இந்த அற்புதங்கள் நடக்கும்..!!
ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது தவிர, இந்த பழம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்கும்.
2. எலும்புகளை வலுவாக்கும்: கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இந்த பழத்தில் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும், இது எலும்புகளை வலுவாக்கும்.
3. கருவுறுதலை அதிகரிக்கும்: இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் பலவீனமாக இருக்கும் போது கூட அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
4. எடையை குறைக்க உதவும்: அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் உங்களது வளர்ச்சிதை மாற்றம் சரியானதாக மாற்றலாம். அதுமட்டுமின்றி, இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி வைத்திருக்கும். மேலும் இந்த பழம் கலோரி அளவை கட்டுப்படுத்தும். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் ஊற வைத்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.
5. இரத்த சர்க்கரையை குறைக்கும்: அத்திப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய பெரிதும் உதவுகிறது. இது தவிர, இதிலிருக்கும் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: அத்திப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. எனவே, தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: அத்திப்பழத்தை ஊரவச்ச தண்ணீர்.. அதை குடித்தால் எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா? கேட்டா அசந்துபோவீங்க!
அத்திப்பழத்தை எப்படி ஊற வைப்பது?:
உலர்ந்த நான்கு அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அதில் அத்திப்பழத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D