மத்தி மீன் பற்றி உண்மைகள் தெரிந்தால் இனி வேற மீன் பக்கமே போகமாட்டீங்க.. அவ்வளவு நன்மைகள் இருக்கு!!

By Kalai Selvi  |  First Published Aug 28, 2024, 6:45 PM IST

Mathi Meen Health Benefits : மத்தி மீனை குறைந்தபட்சம் வாரம் ஒரு தடவையாவது உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 


ஆரோக்கியமான உடலுக்கு நாம் உண்ணும் உணவு முக்கிய காரணமாக உள்ளது. அசைவ உணவுகளை அவ்வப்போது எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அந்த வகையில் மீன் நம் உடலுக்கு எண்ணிடலங்கா நன்மைகள் செய்யக் கூடியது. ஒவ்வொரு மீனிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் மிகுந்து காணப்பட்டாலும், அதில் மத்தி மீன் தனித்துவமானது. இவை  தமிழ்நாட்டில் செழிப்பாக கிடைக்கும். சார்டைன் என்பது இதன் ஆங்கில பெயர். 

பிற மீன்களை காட்டிலும் மத்தி மீனில், நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக காணப்படுகிறது. இதுவே நமது இதய ஆரோக்கியத்தை மேம்பாடு அடைய செய்யும். இதனால் இதயத்தில் நோய்கள் உண்டாகும் வாய்ப்பு குறைவு. கரோனரி இதய நோய், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும். இது மட்டுமல்ல இதனை வாரம் ஒருதடவை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  சால்மன் மீனில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள்; கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?

மத்தியின் மகிமையான சத்துக்கள்: 

மத்தி மீன் உண்பதால் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், விட்டமின் டி, புரதச்சத்து, நல்ல கொழுப்பு, ஃபோலேட், விட்டமின் பி12 ஆகிய சத்துக்களும், செலினியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுச்சத்துகளும் கிடைக்கும். இந்த சத்துக்களால் கண்பார்வை கூர்மை அடைதல், சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

எலும்பு வலுவடையும் : 

பெரும்பாலும் மீன் உண்பது கண்களை காக்கும், தசைகளை வலுவாக்கும் என்பதை நாம் அறிந்ததே. ஆனால் மத்தி மீன் உண்பதால் எலும்புகள் பலம்பெறும். சுமாராக 100கி இந்த மீனை சாப்பிடுவதால் 400 மி.லி பாலில் இருக்கும் கால்சியம் சத்தை பெறலாம். உங்களுக்கு பால் குடிக்க விருப்பம் இல்லையா? கவலையே வேண்டாம், வாரம் ஒன்று அல்லது 2 முறை மத்தி வாங்கி சாப்பிடுங்கள்.  

இதையும் படிங்க:  என்ன கருவாட்டில் இத்தனை நன்மைகள் இருக்கா...தெரிந்து கொள்வோம் வாங்க!

பிபி, சுகர் கட்டுப்பாடு : 

மத்தி மீனில் காணப்படும் அர்ஜினைன், டாரைன் என்ற அமினோ அமிலங்கள்  ஆகியவை கார்டியோமெடபாலிக், இன்சுலின் எதிர்ப்புக்கு நல்ல பயன் தரம் கூடியது. சர்க்கரை வியாதி இருப்பவர்கள் உண்பதால் இன்சுலின் தட்டுப்பாடு குறையும். முதியோர் வாரத்தில் 2 தடவை மத்தி மீன் சாப்பிட்டால் கூட உயர் இரத்த அழுத்தம் குறைந்து கட்டுப்பாட்டுக்கு வரும்.  

அதிகமான புரதம் : 

மத்தி மீனில் தசைகளக் வலுவாக்கும் புரதம் அதிகமாக உள்ளது. இது எளிதில் செரிமானம் அடையும் என்பதால் அனைவரும் உண்ணலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு புரதம் அதிகம் தேவை. அவர்கள் மத்தி மீனை பொறிக்காமல், குழம்பில் சேர்த்து உண்ணலாம். இப்படி செய்வதால் மத்தி மீனில் உள்ள அமினோ அமிலங்கள் எடை குறைக்க உதவி புரியும்.  தசைகளும் வலுவாகும்.  

நல்ல கொழுப்பு : 

நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மேம்படுவது ஆரோக்கியத்திற்கு அவசியம்.  இதுவே இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மத்தி மீன் உண்பதால் கிடைக்கும் நல்ல கொலஸ்ட்ரால், இதய செயல்பாட்டை மேம்படுத்தும். 

மூளை செயல்திறன் : 

மத்தி மீன் உண்பவர்களுக்கு மூளையின் செயல் திறன் மேம்படும். மாணவர்கள் மத்தி உண்பதால் நினைவாற்றல் அதிகமாகும். மத்தி மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் இதற்கு முக்கியமான காரணம். மத்தி மீன் உண்பதால் மகிழ்சியை உண்டாக்கும் டோபமைன் உற்பத்தி அதிகமாகும். இதனால் மன அழுத்தம் குறைந்து மனம் இலகுவாக உணர்வீர்கள். 

வாரம் ஒருமுறை சாப்பிட்டாலே மத்தி மீனில் உள்ள இத்தனை நன்மைகளையும் அனுபவிக்கலாம். அதனால் தவறாமல் வாங்கி உண்ணுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!