Soaked Walnuts Benefits : வால்நட் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றாலும், ஊறவைத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வால்நட் ஒரு சூப்பர் ஃபுட். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் இதை பல வழிகளில் சாப்பிடுகிறார்கள். வால்நட்டை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றாலும், ஊறவைத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உண்மையில், அக்ரூட் பருப்பில் இருக்கும் பண்புகள் நொதிகளின் செயல்பாட்டை தடுக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டால் இது செரிமான செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தும் நொதிகளை உடைத்து விடும். இப்போது ஊற வைத்த வால்நட்டை ஏன் சாப்பிட வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இருதயத்தைப் பாதுகாக்கும் வால்நட்ஸ்: ஆய்வில் வெளிவந்த சூப்பர் தகவல்!
வால்நட் ஊட்டச்சத்துக்கள்:
பொதுவாகவே உலர் பழங்களை ஊறவைத்து பெரும்பாலானார் சாப்பிடுவார்கள். அவற்றில் ஒன்றுதான் வால்நட். ஊற வைத்த வால்நட் தொடர்ந்து சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. உண்மையில், வால்நட்டில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்கள் நிறைந்துள்ளது. சொல்லப் போனால்,
வால்நட் சத்துக்களின் முழு தொகுப்பு ஆகும். இத்தகைய சூழ்நிலையில், ஊற வைத்த வால்நட் முட்டை சாப்பிடுவதால் அது இன்சுலின் உணர்திறனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: வளரும் குழந்தைக்கு தினமும் இரண்டு ஊறவைத்த வால்நட் கொடுங்க... இத்தனை நன்மைகள் கிடைக்கும்!
ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: வால்நட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், ஊறவைத்து அதை ஊற வைத்து சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். மேலும், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. உண்மையில், வால்நட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இரத்த நாளங்களின் செயல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. செரிமான அமைப்பை மேம்படுத்தும்: வால்நட்ஸ் கலோரிகளின் நல்ல மூலம் என்பதால், இதில் இருக்கு பண்புகள் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. அக்ரூட் பருப்பில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டால் உங்கள் செரிமான சக்தி அதிகரிக்கும் மற்றும் மேம்படும்.
3. உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது: வால்நட் பல உடல் பிரச்சினைகளை தீர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வால்நட் பெரிதும் உதவுகிறது. உண்மையில், நீங்கள் ஊறவைத்த வால்நட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது ஆற்றலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
4. எலும்புகளை வலுவாகும்: ஊற வைத்த வால்நட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில், வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
5. ஒவ்வாமையிலிருந்து நிவாரணம் அளிக்கும்: உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் நீங்கள் ஊறவைத்த வால்நட்டை தொடர்ந்து சாப்பிடுங்கள். அது உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை அகற்ற பெரிதும் உதவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D