Marriage Life In Present Days : திருமணத்திற்கு பிறகு ஒருவரது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
'கல்யாணம் செஞ்சு பாரு அப்போ உனக்கு தெரியும்' என்று திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களிடம் சொல்லும் ஒரு பொதுவான டயலாக் இது. இன்னும் சொல்லப் போனால், கல்யாணம் ஆன பிறகு பத்தில் ஒருவன் மட்டுமே திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறான் என்ற நிலை தற்போது இந்த சமூகத்தில் உள்ளது. காரணம், கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் அன்பு, நம்பிக்கையின்மை குறைவு போன்று விஷயங்கள் இதில் அடங்கும். அந்த வகையில், நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் திருமணமானவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை தொடர்ந்து படியுங்கள்..
1. மாமியார் ராஜ்யம்:
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு பிறகு ஆரம்பத்தில் இருந்தது போல மாமியாருடன் இருக்க முடியாது. மேலும், சில வீடுகளில் மாமியார் மருமகள், அம்மா மகள் மாதிரி இருப்பார்கள். அவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். ஆனால், பெரும்பாலான வீடுகளில் இது சாத்தியமில்லை. மாமியாருக்கு மருமகள் பிடிக்காது, மருமகனின் வார்த்தை மாமியாருக்கு பிடிக்காது. என் வீட்டிற்கு வந்தால் கூட ஏதோ ஒரு மூன்றாவது நபரிடம் பழகுவது போல்தான் நடந்துக்கொள்வார்கள்.
2. வேலை அழுத்தம்:
திருமணத்திற்கு பிறகு அலுவலகப் பணியையோ அழுத்தத்தையோ வீட்டிற்குள் கொண்டு வந்து இருப்பவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டாம் என்று மனைவி கணவனை எச்சரிப்பாள். ஆனால், அது சொல்வது போல் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டுக்கும் வரும் கணவனிடம் மனைவி வீட்டு பிரச்சினைகளை ஏதாவது சொன்னால், கணவனுக்கு மிகுந்த வேதனையும், உச்சகட்ட கோபமும் ஏற்படும்.
3. குழந்தைகளின் விஷயங்கள்:
வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களை பராமரிப்பது மிகவும் அவசியம். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தில் கணவன் மனைவிக்கு இடையே சில சமயங்களில் தகராறு கூட வரும். மேலும் குழந்தைகளை வளர்க்கும் விதவும் இருவருக்குள்ளும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், குழந்தைகள் முன் சண்டை போடுவது அவ்வளவு நல்லதல்ல.
4. காதல்:
திருமண வாழ்க்கையில் எப்போதும் சலிப்பு மட்டும் இருந்தால் அந்த வாழ்க்கை இனிமையாக இருக்காது. அன்பும், நல்லிணக்கமும் இருக்கும் இருந்தால் மட்டுமே திருமண வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். ஆனால், சில நேரங்களில் இருவருக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்படும். அதாவது, நீங்கள் காதலிக்கும் விதம் உங்கள் மனைவிக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது அவள் எதை விரும்புகிறாள் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே, நீங்கள் இருவரும் உட்காந்து மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுங்கள். அப்போது தான் உங்களது திருமண வாழ்க்கையில் காதல் நிலைத்திருக்கும்.
5. வீட்டு வேலைகள்:
இதுவும் எல்லாருடைய வீடுகளிலும் நடக்கும். அதாவது, கணவன் சும்மா வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது, மனைவி மட்டும் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் கண்டிப்பாக கோபப்படுவாள். எனவே வீட்டு வேலைகளை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
6. பழக்கவழக்கங்கள்:
கணவனுக்கு விடுமுறை நாட்களில் தூங்குவது பிடிக்கும் என்றால், மனைவிக்கு ஷாப்பிங் செய்வது பிடிக்கும். இந்த விஷயங்களில் இருவரது விருப்பங்கள் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டால் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.