Soaked Almonds Health Benefits : தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நாட்ஸ்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த நாட்ஸ்களில் ஒன்றுதான் பாதாம். பாதாம் சாப்பிட்டால் மூளை கூர்மையாகும் என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். சின்ன வயசிலிருந்தே இதை சாப்பிடுங்கள் என்று பெரியவர்களும் சொல்லுவார்கள். ஆனால், பெரியவர்கள் ஏன் இப்படி அறிவுரை வழங்குகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
உண்மையில், பாதாமை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பல கடுமையான பிரச்சனைகளிலிருந்தும் விடுவிக்கும். பாதாமின் இந்த அதிசய நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இன்று இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: நீங்கள் தினமும் பால் குடித்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? தெரிஞ்சுக்க இதை படிங்க..
ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. செரிமான அமைப்பு வலுவடையும்:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாதாமை சாப்பிட்டு வந்தால் பல செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உண்மையில், பாதம் செரிமான அமைப்பை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
2. சருமத்திற்கு நன்மை பயக்கும்:
பாதாமில் அலர்ஜிய எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதன் காரணமாக இது வறண்ட சரும பிரச்சனைகளில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கும். அதுமட்டுமின்றி, தினமும் ஊறவைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான பல நோய்கள் உங்களை விட்டு விலகி ஓடும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் முகத்தில் பொலிவு அதிகரிக்கும்.
இதையும் படிங்க: பாதாம் சாப்பிடும் சரியான வழி என்ன தெரியுமா? குழந்தைகள் முதல் பெண்கள் இப்படித்தான் சாப்பிடனும்..!!
3. எடையை குறைக்கும்:
பாதாமை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவும். எப்படியெனில், அதன் நுகர்வு உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பி வைக்கும். இதன் காரணமாக நீங்கள் நீண்ட நேரம் பசியை உணர மாட்டீர்கள். இது தவிர, பாதம் சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் உடல் கொழுப்பை விரைவாக குறைக்கும்.
4. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், நீரிழிவு நோயாளிகளுக்கு மெக்னீசியம் குறைபாடு காரணமாக இன்சுலின் எதிர்ப்பு அடிக்கடி அதிகரிக்கிறது. இதன் காரணமாக, இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்க தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், ஊற வைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D