Relationship Advice : என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள் என்று என் நண்பர்களும், உறவினர்களும் என்னை கேலி செய்கிறார்கள் என்று புலம்பும் ஆணுக்கு நிபுணரின் பதில் இங்கே.
கேள்வி: எனக்கு 34 வயது ஆகிறது. எனக்கு திருமணமாகிவிட்டது. நான் என் மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். அவள் என் அலுவலகத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறாள். சொல்லப்போனால் அவள் என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். இந்த ஒரு விஷயத்தை தவிர நாங்கள் இருவரும் நல்ல ஜோடி என்றே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி, எனது மனைவியின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் எனது குடும்பத்தில் இருந்து வேறுபட்டது. எல்லாவற்றுக்கும் நான் அவளையே சார்ந்து இருக்கிறேன் என்று என் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியும். முக்கியமாக என் மனைவி என்னை விட அதிகமாக சம்பளம் வாங்குவதால் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை பார்த்து எப்போதும் 'ஹவுஸ் மேட்' என்று கேலி கிண்டல் செய்வார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதை நான் நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வேன். ஆனால், சில சமயங்களில் அவர்களுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகவே தாக்கும்.
undefined
இவர்களது இந்த நடத்தையால் நான் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறேன். இதனால், எனக்குள் கொஞ்சம் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இதையும் படிங்க: ஆண்களே உஷார்! யாராவது இந்த 'செக்ஸ்' பொய்களை சொன்னால் நம்பி ஏமாறாதீங்க!!
நிபுணரின் பதில்: நண்பர்கள், உற்ற உறவினர்கள் சொன்ன வார்த்தைகள் உங்களை மிகவும் புண்படுத்தி இருக்கிறது என்று அறிய முடிகிறது. ஆனால், உண்மையில் சில சமயங்களில் இது போன்ற வார்த்தைகள் காயப்படுத்தினாலும் பொறுமையை இழக்காமல் கவனமாக இருங்கள். ஏனெனில் அந்த சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருப்பது தான் மிகவும் முக்கியம்.
ஆண்கள்தான் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும், பெண்கள் வீட்டில் இருக்கும் வேலைகளை தான் பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றும் நம்முடைய சமூகத்தில் இருக்கிறது. இதிலிருந்து ஏதாவது மாறுபட்டால் கண்டிப்பாக அது பிரச்சினையாகி விடும். இதே பிரச்சினையை தான் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதனால் தான் உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. இதை கையாளுவது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதையும் படிங்க: சிகரெட் பிடிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?
தைரியமாக பதில் சொல்லுங்கள்: உங்களைப் பற்றி இப்படி கேலி கிண்டல் செய்பவர்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்பதால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான மனக்கசப்பை ஏற்படுத்த வேண்டாம். மேலும், உங்கள் மனைவி உங்களை விட அதிகமாக சம்பளம் வாங்குவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், உங்கள் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களிடம் தைரியமாக பதில் சொல்லுங்கள். அதாவது, நீங்கள் உங்கள் மனைவியை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றும், அவள் செய்யும் செயல்களுக்கு இது நான் செலுத்தும் மரியாதை என்று தெளிவாகவும், தைரியமாகவும் சொல்லுங்கள்.
இவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் இருவரும் சம்பாதிப்பதும் மூலம் தான் உங்கள் குடும்பத்திற்கும், வீட்டிற்கும் பங்களிக்கிறீர்கள். எனவே இதில் வெளி ஆட்கள் யாரும் தலையிட முடியாது உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களைப் பார்த்து சொல்லும் அந்த வார்த்தைகளை ஊக்குவிப்பது உங்கள் திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் சொல்லுவதை கேட்பது நல்லதல்ல.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D