வாழைப்பழம் மட்டுமின்றி அதன் தண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, அதன் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து, இங்கு பார்க்கலாம்.
நம் உணவில் தினமும் சாப்பிடும் பல பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை. ஆனால், அவற்றில் மிகவும் முக்கியமான பழம் எதுவென்றால், அது வாழைப்பழம் தான். பொதுவாகவே, வாழைப்பழமும், அதன் பூக்கள் தான் நாம் அதிகமாக சாப்ப்பிட பயன்படுத்துவோம். ஆனால், இவற்றை போலவே, இதன் வாழைப்பழ தண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, வாழைப்பழ தண்டின் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து, இங்கு பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்: வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மிக குறைவாகவும் உள்ளது. இதைத் தவிர இதில் பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் இரும்பு போன்ற பிற தாதுக்களும், வைட்டமின் சி, பி6 ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எடை இழப்புக்கு நல்லது: இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மிக குறைவாகவும் உள்ளது. எனவே, இதன் சாற்றை தினமும் குடித்து வந்தால், விரைவில் எடை இழப்பிற்கான நல்ல பலனை காண்பீர்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் ஒரு சிறப்பு வகை நார்ச்சத்து உள்ளது, இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற பெரிதும் உதவுகிறது.
வயிற்று பிரச்சினைகளுக்கு நல்லது: வாழைத்தண்டு சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். இது தவிர இது வயிற்றுக்கு மிகவும் நல்லது. செரிமானம், மலச்சிக்கல் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. மேலும், அமிலத்தன்மை காரணமாக வயிறு அல்லது மார்பில் எரியும் உணர்வை சமாளிக்க இது உதவும்.
இதையும் படிங்க: சிறுநீரக கல் எளிதில் கரைய வாரம் ஒரு முறையாவது வாழைத்தண்டு சட்னி செய்து சாப்பிடுங்க!
ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்: வாழைத்தண்டில் வைட்டமின் பி6 அதிகமாகவும், இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கின்றது. அதே நேரத்தில், இதில் இருக்கும் பொட்டாசியம் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையை அகற்றும்.
சிறுநீர பிரச்சினைகளுக்கு நல்லது: சிறுநீரக கற்கள் பிரச்சினைகள் அவதிப்படுபவர்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் மிகவும் நல்லது. தினமும் இதை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும். இது தவிர, சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை திறம்பட போக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: சிறுநீரக பிரச்சனையை ஒழிக்க உதவும் வாழைத்தண்டு வைத்து டேஸ்டான வாழைத்தண்டு மோர் கூட்டு செய்து சாப்பிடுங்க!.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகள் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படும். இதில் இருக்கும் நார்சத்து கிடைக்க இதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை: முதலில் தண்டை நன்றாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு 1 கப் தண்ணீர் கலந்து, அரைத்து வடிகட்டவும். பிறகு இதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும். நீங்கள் விரும்பினால் வாழைத்தண்டை பொறியலாகவோ கூட்டாகவோ கூட செய்து சாப்பிடலாம்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D