பலாக்கொட்டை வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
இப்போது பலாப்பழ சீசன் என்பதால், கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். பலாக்கொட்டைகளை தூக்கி எறியாமல், வீட்டில் வைத்திருந்தால் அதில் சூப்பரான ஒரு டிஷ் செய்யலாம். அது வேற ஏதும் இல்லைங்க 'பலாகொட்டை வருவல்' தான். இந்த பலாக்கொட்டை வறுவல் கறி சுவையை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு பலாக்கொட்டையின் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த பலாக்கொட்டை வறுவல் செய்வது மிகவும் எளிது. முக்கியமாக, உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பலாக்கொட்டை வறுவல் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க, இப்போது இந்த பலாக்கொட்டை வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
இதையும் படிங்க: மீல் மேக்கரில் ஒரு முறை இப்படி கிரேவி செய்ங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்!
பலாக்கொட்டை வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
பலாக்கொட்டை - 1/4 கிலோ
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
தண்ணீர் - 2 கிளாஸ்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: இனி சிக்கன் வாங்கினா ஒன் டைம் இப்படி வெள்ளை குருமா செய்ங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்!
செய்முறை:
பலாக்கொட்டை வறுவல் செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கவும். இதனை அடுத்து அதில் பொடியாக நறுக்க தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
தக்காளி நன்கு கூழான பிறகு அதில் சின்ன சின்னதாக வெட்டி வைத்த பலாக்கொட்டைகளை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உங்கள் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். மசலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனை அடுத்து எடுத்து வைத்த 2 கிளாஸ் தண்ணீரை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பிறகு மூடி வையுங்கள். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால், தண்ணீர் வற்றி இருக்கும் ஒருவேளை தண்ணீர் வற்றவில்லை என்றால் மீண்டும் வேக வையுங்கள். கடைசியாக கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி அதை அதன் மேல் தூவி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை வறுவல் ரெடி..!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D