குஷ்புவின் எடை இழப்பு பின்னணி... ஓராண்டில் 20 கிலோ எடை குறைத்தது எப்படி? 

Published : Apr 17, 2025, 04:36 PM ISTUpdated : Apr 17, 2025, 04:39 PM IST
குஷ்புவின் எடை இழப்பு பின்னணி... ஓராண்டில் 20 கிலோ எடை குறைத்தது எப்படி? 

சுருக்கம்

நடிகை குஷ்புவின் எடை இழப்பு பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம். 

Actress Kushboos Weight Loss Secrets : பூசினாற்போல தோற்றம் கொண்ட நடிகை குஷ்பு,  அண்மையில் 20 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அவருடைய எடையிழப்பு ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரை காணும் யாரும் குஷ்புவிற்கு 54 வயதென்றால் நம்பமாட்டார்கள். கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்துள்ளது சாதாரண விஷயம் அல்ல. இதை அவர் செய்தது எப்படி? நெட்டிசன்கள் அவர் ஊசி மூலம் செயற்கையாக எடையை குறைத்திருக்கலாம் என கூறிவருகின்றனர். உண்மையில் அவர் எடையிழப்பு என்ன செய்தார் என்பதை இங்கு காணலாம். 

உடல்நல பிரச்சனைகள்: 

குஷ்பு சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தார். முழங்காலில் அவருக்கு  அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டன. இந்த சூழலில் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருடைய உடல்நலக் காரணங்கள் ஒருபுறம் இருக்க, ஓராண்டில் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார் குஷ்பு. இதற்கு அவர் ஏதேனும் உடல் குறைப்பு ஊசிகள் எடுத்துக் கொண்டாரா? என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியபோது, அதை அவர் மறுத்துள்ளார். 

இதையும் படிங்க:  25வது திருமண நாள் : மனைவி குஷ்புடன் சென்று முருகனுக்கு மொட்டையடித்த சுந்தர் சி!

குஷ்புவின் எடை குறைப்பு பின்னணி; 

நாள்தோறும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வாராம். அதைப் போலவே மாலையிலும் சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறார்.  ஒருவேளை நடைபயிற்சி செய்யமுடியாவிட்டால் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்.  

இதையும் படிங்க:  Kushboo Serial: குஷ்பு ஹீரோயினாக நடிக்கும் சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்!

குஷ்பு அட்வைஸ்! 

நாம் எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் செய்துவிட்டு முயற்சியைக் கைவிடக்கூடாது. குஷ்பு எடையை குறைத்ததற்கு அவருடைய ஓராண்டு முயற்சி தான் காரணம் என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  

தான் மாலை நடைபயிற்சி செய்யமுடியாவிட்டால் அதற்கு பதிலாக உடற்பயிற்சி நேரத்தை மாற்றிக் கொள்வது அவருடைய அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஏதோ செய்யவேண்டும் என்றில்லாமல் தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். இதுபோல தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களாலும் எடையை குறைக்க முடியும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்