பிரிட்டன் ராணி கமிலா தன் கிரீடத்தில் அணிய மறுத்த கோஹினூர் வைரம்! இந்தியாவுக்கு சொந்தமானதா?அதன் விலை என்ன!

Kohinoor Diamond: முடி சூட்டு விழாவில் பிரிட்டன் ராணி கமிலா கிரீடத்தில் இந்திய வைரமான கோஹினூர் ஏன் இடம்பெறவில்லை என்பதன் முழு பின்னணி... 


மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா லண்டனில் மே 6ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி தான் கமிலா. முடிசூடும் விழாவில் பிரிட்டன் மன்னர் சார்லஸின் மனைவியாக அதிகாரப்பூர்வமாக ராணி கமிலா முடிசூட்டப்படுகிறார். இந்த விழாவில் கோஹினூர் வைரம் வைத்த கிரீடத்தை  பிரிட்டன் ராணி கமிலா அணியமாட்டார் என தகவல் வெளியானது. 

முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்களால் இந்திய அரச சாம்ராஜ்யத்திலிருந்து கோஹினூர் வைரம் எடுக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சர்ச்சை நிலவி வருகிறது. பிரிட்டன் ராணி எலிசபெத் மரணத்திற்கு முன்பு அணிந்திருந்த ஆடம்பரமான கிரீடத்தில் கூட கோஹினூர் வைரம் காணப்பட்டது.  

Latest Videos

பிரிட்டன் பாரம்பரியத்தின்படி, ராணி கமிலா அண்மையில் காலமான பிரிட்டன் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்தை அணிய வேண்டும். ஆனால் கோஹினூர் வைரத்தின் சர்ச்சை காரணமாக இந்த கிரீடம் பயன்படுத்தப்பட போவதில்லை என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்கு ராணி கமிலா சொன்ன விளக்கம், கேட்போரை வியக்கவைத்துள்ளது. 

அந்த விழாவில் விலையுர்ந்த பொருள்களை தவிர்ப்பதாக ராணி கமிலா தெரிவித்துள்ளார். கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்திற்கு பதிலாக ராணி மேரியின் பழைய கிரீடத்தை அணிவார் என தெரிகிறது. கோஹினூர் வைரத்தில் விலை, எடை என்ன என்பதை அடுத்ததாக பார்ப்போம். 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி 2023... இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!! கூடவே நல்ல நேரமும் பொறக்க போகுது!

கோஹினூர் வைரத்தின் விலை 

உலகில் வெட்டப்பட்ட வைரங்களில் அளவில் மிகப்பெரியது 105 காரட் மதிப்பு கொண்ட கோஹினூர் தான்.  தற்போது இந்த வைரம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி விக்டோரியா கிரீடத்தில் பொருத்தும் முன்னர் அதன் எடை 38.2 கிராம், 191 மெட்ரிக் காரட் என்பதாக இருந்துள்ளது. 

கோஹினூர் வைரத்தின் வரலாறு 

உலகில் அதிக விலை மதிப்பு கொண்டதாக கருதப்படும் கோஹினூர் வைரம் பஞ்சாபில் இருந்து எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த மன்னர் துலீப் சிங்கிற்கு சொந்தமானது. பிரிட்டிஷ் ஆட்சியில் கிழக்கிந்திய கம்பெனி பஞ்சாபை இணைத்து, விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவித்தது. அதன் பின்னர் கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர். இந்த வைரத்தை விக்டோரியா மகாராணி ஒரு வட்ட வடிவ கிரீடத்தில் வைத்து அணிந்தார். அதன் பின்னர் ராணி அலெக்ஸாண்ட்ராவின் கிரீடத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டது. இதன் பின்னரே ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் வைக்கப்பட்டது. இப்போது இதனை ராணி கமிலா அணிந்து கொண்டால் இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்கும் ராஜதந்திர பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் தவிர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மகளாக இருந்தும் இஷா அம்பானி கூச்சம் இல்லாமல் செய்யும் காரியம்..! மகளை அரவணைக்கும் தாய்!!

click me!