அம்பானி மகளாச்சே.. இஷா அம்பானி கல்யாண பத்திரிக்கையில் கூட தங்கம் பதிப்பு? அட விலையே இத்தனை லட்சமா?

By Ma riya  |  First Published Apr 19, 2023, 6:37 PM IST

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமண அழைப்பிதழில் தங்கம் பதிக்கப்பட்டிருந்தது. அதன் விலை சில லட்சங்கள். அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?


உலகளவில் குறிப்பிடத்தகுந்த கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு ஆனந்த் பிரமல் என்பவருடன் டிசம்பர் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்கள் திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில், 1 அழைப்பிதழின் விலை மட்டும் 3 லட்சம் ரூபாய். தன் ஒரே மகளின் திருமணத்தை என்றால் அம்பானி சும்மாவா விடுவார். பல கோடிகளில் கோலாகலமாக நடத்தினார். 

இஷா அம்பானி, ஆனந்த் பிரமாலின் திருமணக் கொண்டாட்டங்கள் அப்போது தலைப்பு செய்தியாகவும் இருந்தன. 1 திருமண அழைப்பிதழ்களுக்கு ரூ.3 லட்சம் செலவானது என்றால் அதில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று தோன்றுகிறதா? அவை சாதாரண அழைப்பிதழ்கள் அல்ல, ஏனெனில் அவை பார்க்கவே தங்கம் போல மின்னின. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பிகினி வேக்சிங் செய்யும்போது.. இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் உரிந்த தோல்! ஸ்பாவுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்

அழைப்பிதழை திறந்தவுடன், மகாலட்சுமி வீற்றிருக்கிறார். அழைப்பிதழின் முதல் பக்கத்தில் தங்கத்தால் பதிக்கப்பட்ட காட்சி உள்ளது. இந்த அழைப்பிதழில் இஷா அம்பானி கைப்பட எழுதிய வரிகளும் உள்ளன. இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் நான்கு பாட்டிகளுக்கு அஞ்சலி செலுத்தும் இதயப்பூர்வமான கடிதமும் அதில் இருக்கிறது. அப்பப்பா! இப்படி ஒரு கல்யாண பத்திரிக்கையை எப்படி தான் யோசித்தார்களோ! அதுவும் 3 லட்ச ரூபாய்!! 

இஷா அம்பானியின் திருமண விழாக்களுக்கான மொத்த செலவு ரூ. 700 கோடிக்கும் அதிகமாக ஆனதாக சொல்லப்படுகிறது. பியோனஸின் நிகழ்ச்சி, ரூ.90 கோடி மதிப்பிலான திருமண லெஹங்கா, முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் பிரம்மாண்ட இல்லமான ஆண்டிலியாவில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்தன. 

 

இதையும் படிங்க: அம்பானி மனைவி வைத்த பார்டி.. கை துடைக்கும் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா?

click me!