சாக்கு பையில் பேண்ட்.. இதுக்கு போய் இத்தனை ஆயிரம் ரூபாயா.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க!

By Ma Riya  |  First Published Feb 18, 2023, 2:11 PM IST

பேஷன் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். தற்போது சாக்கு பையில் வடிவமைக்கப்பட்ட ஆடை வைரலாகிவருகிறது. 
 


உடைகள் காலத்திற்கு ஏற்றார் போல மாறிக்கொண்டே இருக்கிறது. கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், கண்ணாடியாய் தெரியும் டிரான்ஸ்பரன்ட் புடவைகள் உள்பட திரைப்படங்களில் வரும் ஆடைகளும் மக்கள் மத்தியில் அவ்வப்போது ட்ரெண்டாகும். மார்கெட்டில் புதிதாக ஏதாவது வந்தவுடன், பெரிய வடிவமைப்பாளர்கள் கூட தங்கள் பிராண்டில் அதை போட்டு விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள். 

இதையடுத்து பிரபலங்களும் அதை அணியத் தொடங்கி புதிய டிரெண்டை அறிமுகம் செய்கிறார்கள். இளைய சமுதாயம் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் சமீபத்தில், வைரலான ஆடை, பிரபலங்களால் அல்ல; அதன் விலையால் கவனம் ஈர்த்துள்ளது. சாக்குத்துணியால் வடிவமைக்கப்பட்ட அந்த பிளாசோ பேண்ட்டின் விலையை கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். 

Tap to resize

Latest Videos

இந்த புதிய ட்ரெண்டை பின்பற்ற இனி நாமும் சாக்குத் துணிகளை தான் உடுத்த வேண்டும் போலிருக்கிறது. தற்போது இந்த சாக்குப் பையால் ஆன பலாஸ்ஸோ பேண்ட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு மக்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக ஒரு பிளாசோ பேண்டை வெறும் ரூபாய் 100 தொடங்கி ரூபாய் 2ஆயிரம் வரைக்கும் கூட வாங்கலாம். ஆனால் வைரலான சாக்குப் பை பேண்டின் விலை ரூ.60 ஆயிரமாம். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்னால் மர்லின் மன்றோ கூட இதைப் போல சாக்குப்பையால் ஆன உடையை உடுத்தியது கவனம் ஈர்த்தது. 

அப்படி என்ன சிறப்பு? 

சாக்குப் பைகளை குறித்து நம்மை கேட்டால் அரிசி போடவும், வீட்டு வாசலில் கால் மிதிப்பானாகவும் பயன்படுத்தலாம் என்போம். வீட்டில் தூக்கி எறியும் சாக்கு பைகளில் தான் அந்த ஆடைகளையே உருவாக்குகிறார்கள். இந்த ஆடையின் தனித்துவமே அதுதான். தற்போது பெரிய டிசைனர்கள் கூட பைஜாமா போன்ற ஆடைகளை பழைய சாக்கு பைகளில் வடிவமைத்து அணிகிறார்கள். இது காண்பதற்கு வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. 

வைரல் வீடியோ 

இந்த சாக்குப்பை பேண்ட் ஆடையின் வீடியோ வேடிக்கையான தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டது. சில நிமிடங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதற்கு பலவகையான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. "எங்கள் வீட்டில் இதுபோன்ற சாக்கு மூட்டைகள் நிறைய உள்ளன, இப்போது எங்களிடம் நிறைய பணம் உள்ளது" என ஒருவர் கேலியாக கருத்து தெரிவித்துள்ளார். "இதை உண்மையான மறுசுழற்சி" என இன்னொருவர் கருத்திட்டுள்ளார். 

இதையும் படிங்க: மாசி அமாவாசை 2023: எப்போது? எப்படி விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்..

இதையும் படிங்க: மகா சிவராத்திரி அன்று வரும் சனிப் பிரதோஷம்.. இப்படி வழிபட்டால் ஈசன் இரட்டிப்பு பலன்களை வாரி வழங்குவார்

click me!