Humorous Persons - Happy Life: இந்தியாவிலேயே... நம் தென் இந்தியர்கள் தான் பணி இடங்களில் அதிகம் நகைச்சுவைகளை பகிர்வதாக சமீபத்தில் லிங்கெடின் சமூக வலைத்தளம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இன்றைய 'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன.
'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’
'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்கிறது பழமொழி. ஆனால், இன்றைய நவீன உலகில் அவற்றை நாம் மறந்து விட்டோம், இல்லை தொலைத்து விட்டோம் என்றே கூறலாம். இன்றைய தனிமனித வாழ்வில் இன்று மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி விட்டது. இதனை எதிர்கொள்ளத் தெரியாமல் பலரும் வாழ்க்கையே வெறுத்து விட்டது போல் துவண்டு விடுகின்றனர்.
அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. கரோனா உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் மகிழ்ச்சியாக கடந்து செல்வது அவசியம்.
இன்று பலருக்கும் வேலை குறித்த பயம் அடிக்கடி வந்து செல்வதே மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாகின்றது. வேலையை வாழ்வாக கருதுவதால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதலில் வேலை என்பது உங்கள் வாழ்வாதாரத்திற்க்காக என்பதை உங்கள் மனதிற்கு புரிய வையுங்கள். பின்னர் மகிழ்ச்சியாக கடந்து செல்லுங்கள்.
மன அழுத்தம்:
மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நன்றாக வாய்விட்டு சிரித்தாலே போதும். சிரிப்பு இணையான மருந்து வேறெதுவும் இல்லை. அத்தகைய நகைசுவை உணர்வு இந்தியர்களிடம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக தென் இந்தியர்கள் நகைச்சுவை உணர்வு அதிகள் தென்படுகிறதாம்.
சமீபத்திய ஆய்வின் முடிவில்:
சமீபத்திய ஆய்வின் முடிவில், தென் இந்தியர்கள் 5ல் இருவர் தினம் ஒரு நகைச்சுவையாவது பகிர்ந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியர்களும், இத்தாலியர்களும் (38%) அதிகம் நகைசுவைகளை பகிர்பவர்களாக இருக்கின்றனர். அதேபோன்று, உலகில் பணி இடங்களில் குறைந்த நகைச்சுவை பகிரல் ஆஸ்திரேலியாவில் தான் அதிகம் உள்ளது.