Puri Jagannath Rath Yatra 2022...பூரி ஜெகநாதர் தேர் திருவிழா: பூரி ஜெகன்நாதர் கோவில் தேர் திருவிழா ஜூலை 1ம் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் சிறப்பாக துவங்கப்படுகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா வருகிற ஜூலை 1 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இது 42 நாட்கள் நடக்கும், மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழாவிற்கு கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெகன்னாதர் கோயில் தேர் திருவிழா:
(ரத யாத்திரை ஆரம்பம்)- 01 ஜூலை (வெள்ளிக்கிழமை)
ஹேர பஞ்சமி -05 ஜூலை (செவ்வாய்)
சந்தியா தரிசனம் -8 ஜூலை (வெள்ளிக்கிழமை)
பஹுதா யாத்ரா - 09 ஜூலை (சனிக்கிழமை)
சூனா பேஷா -10 ஜூலை ( ஞாயிறு)
ஆதார பனா -11 ஜூலை (திங்கள்)
நிலாத்ரி பிஜே - 12 ஜூலை (செவ்வாய்)
கடந்த மே 3 ம் தேதி தேர் வடிவமைப்பு:
ஒடிசாவில் பாரம்பரியமாக பூரி ஜெகன்நாதர் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், அதற்கான 3 தேர்கள் வடிவமைப்பு பணி கடந்த மே 3 ம் தேதி சிறப்பாக துவங்கப்படுகிறது.மேலும், இந்தக் கோயிலை உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய தலமாக மாற்றுவதற்காக முயற்சியிலும் ஒடிசா மாநில அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று பிரம்மாண்டமான தேர்கள்:
கிருஷ்ணர் அவரது உடன்பிறப்புகள், அவரது மூத்த சகோதரர் பாலபத்ரா மற்றும் அவரது தங்கை சுபத்ரா மற்றும் சுபத்திரை ஆகியோர்களை வழிபடப்படுவதே இந்த கோயில் சிறப்பு அம்சமாகும். இதில், ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் பயன்படுத்தப்படும். இந்த தேர்கள் வடிவமைப்பு பணியில் 100 தச்சர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஜகந்நாதரின் தேரில் 16 சக்கரங்களும், பாலபத்ரரின் தேரில் 14 சக்கரங்களும், சுபத்திரை தேரில் 12 சக்கரங்களும் உள்ளன.
வழிபாடுகள்:
இந்த நாளில் விரதம் இருந்து தொண்டு செய்தல், பிறருக்கு உதவி செய்வது கூடுதல் பலன் அளிக்கும் என்பது ஐதீகம். மேலும், திருமண காரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் சக்தி இந்த தெய்வத்திற்கு உள்ளதாம். அதுமட்டுமின்றி, இந்த விழாவில் சிறப்பு பிராத்தனையாக பல பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, தானம் தர்மங்கள் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.