IPL 2020: இரவு பகலா போராடி வென்ற சுனில் நரைன்; அடுத்தடுத்த குட்நியூஸ்.. கொண்டாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

By karthikeyan VFirst Published Oct 18, 2020, 9:06 PM IST
Highlights

சுனில் நரைன் பவுலிங் ஆக்‌ஷனில் எந்த பிரச்னையும் இல்லை; அவர் தொடர்ந்து பந்துவீசலாம் என்று ஐபிஎல் பவுலிங் ஆக்‌ஷன் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நான்காமிடம் தங்களுக்குத்தான் என்ற நம்பிக்கையை கேகேஆர் அணிக்கே அளிக்கும் அளவிற்கான ஒரு வெற்றியை, சன்ரைசர்ஸுக்கு எதிராக சூப்பர் ஓவரில் பெற்றது கேகேஆர்.

சுனில் நரைன் ஆடாததால் அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி வெறும் பதினைந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஃபெர்குசன், சூப்பர் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி ஒருவனாக கேகேஆருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஃபெர்குசனின் பவுலிங் கேகேஆருக்கு வலுசேர்த்துள்ள நிலையில், சுனில் நரைன் சிக்கலும் தீர்ந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்த சுனில் நரைன் பவுலிங் ஆக்‌ஷன் மீது கள நடுவர்கள் புகாரளித்தனர். ஆனால் சுனில் நரைன் பவுலிங் போட எந்த தடையும் விதிக்காமல், அதேவேளையில் மேலும் ஒருமுறை பவுலிங் ஆக்‌ஷன் சர்ச்சைக்குள்ளானால், இந்த சீசனில் பந்துவீச முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத கேகேஆர் அணி, சுனில் நரைன் பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபித்துவிட்டு அவரை ஆடவைத்துக்கொள்கிறோம் என்றது. சுனில் நரைன் விவகாரத்தில் விரைந்து பரிசோதித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததுடன், சுனில் நரைனை அடுத்த 2 போட்டிகளில் ஆடும் லெவனில் எடுக்கவில்லை.

அதன்பின்னர் ஒருவாரமாக இரவு பகலாக பந்துவீசி, பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டு ஐபிஎல் பவுலிங் ஆக்‌ஷன் கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவற்றை பரிசோதித்த ஐபிஎல் கமிட்டி, சுனில் நரைனின் முழங்கை ஐபிஎல் விதிக்குட்பட்டுத்தான் வளைகிறது. எனவே அவரது பவுலிங் ஆக்‌ஷனில் பிரச்னையில்லை என்று அவர் பந்துவீச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

2015ல் அவரது பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சர்ச்சை எழுந்தது. அவரது பவுலிங் ஆக்‌ஷன் பரிசோதிக்கப்பட்டு, சரியானது என்று நிரூபிணமாகி,அதிலிருந்து மீண்டு அதன்பின்னர் 68 ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்போதும் மீண்டும் சிக்கலில் சிக்கி அதிலிருந்து தனது பவுலிங் ஆக்‌ஷனை நிரூபித்து தப்பியுள்ளார் நரைன்.
 

click me!