காயத்திலிருந்து மீண்ட ரோஹித் சர்மா.. ஃபார்முக்கு திரும்பிய பொல்லார்டு!! மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

Published : Apr 13, 2019, 03:50 PM IST
காயத்திலிருந்து மீண்ட ரோஹித் சர்மா.. ஃபார்முக்கு திரும்பிய பொல்லார்டு!! மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

சுருக்கம்

கடந்த போட்டியில் காயத்தால் ஆடாத ரோஹித் சர்மா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு திரும்பியுள்ளார். பும்ராவுடன் பெஹ்ரெண்டோர்ஃப் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகிய இருவரும் மிரட்டலாக பந்துவீசிவருகின்றனர். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஆடிய போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 

கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை மந்தமாக தொடங்கினாலும் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுடன் மிரட்டிவருகிறது. கடந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த பொல்லார்டு, இந்த சீசனிலும் பெரிதாக ஆடாமல் இருந்துவந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்து மிரட்டலான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

கடந்த போட்டியில் காயத்தால் ஆடாத ரோஹித் சர்மா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு திரும்பியுள்ளார். பும்ராவுடன் பெஹ்ரெண்டோர்ஃப் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகிய இருவரும் மிரட்டலாக பந்துவீசிவருகின்றனர். எனவே வலுவான ஒரு அணியுடன் ராஜஸ்தானுடன் மோதுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மும்பை வான்கடேவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பிலும், வெற்றியை தொடரும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியும் களமிறங்கியுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, ராகுல் சாஹர், பும்ரா, அல்ஸாரி ஜோசப், பெஹ்ரெண்டோர்ஃப். 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்