அவரு தோனி இல்லங்க ஞானி.. அவரு சொன்னாரு நான் செஞ்சேன்!! ஜடேஜா பகிரும் சுவாரஸ்யம்

Published : Apr 13, 2019, 01:47 PM IST
அவரு தோனி இல்லங்க ஞானி.. அவரு சொன்னாரு நான் செஞ்சேன்!! ஜடேஜா பகிரும் சுவாரஸ்யம்

சுருக்கம்

வலிமையான கேப்டனின் தலைமையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது. சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ, கேப்டன் தோனி மிக முக்கிய காரணம். மிகுந்த அனுபவம் வாய்ந்த தோனியின் வழிநடத்தலால் அந்த அணி மிரட்டிவருகிறது.   

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழும் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. 

நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. டேவிட் வில்லி, லுங்கி நிகிடி ஆகிய சிஎஸ்கே வீரர்கள் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், காயம் காரணமாக பிராவோவும் ஓய்வில் இருக்கிறார். ஆனால் யாருடைய இழப்பும் சிஎஸ்கே அணியை பாதிக்கவில்லை. 

வலிமையான கேப்டனின் தலைமையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது. சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ, கேப்டன் தோனி மிக முக்கிய காரணம். மிகுந்த அனுபவம் வாய்ந்த தோனியின் வழிநடத்தலால் அந்த அணி மிரட்டிவருகிறது. 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி நம்பிக்கையை கொடுத்தார் ஜடேஜா. அந்த ஷாட்டை கஷ்டப்பட்டு அடித்துவிட்டு பேலன்ஸ் மிஸ்ஸாகி கீழே விழுந்தார். அந்த ஓவரில் தோனி அவுட்டானாலும் கடைசி பந்தில் சாண்ட்னெரின் சிக்ஸரால் திரில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. 

தான் சிக்ஸர் அடித்தது குறித்து பேசிய ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் முதல் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் வீசுவார் என்று தோனி என்னிடம் கூறினார். அதனால் நான் தயாராக இருந்தேன். அவரும் தோனி சொன்னதை போலவே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் வீசினார். ஆனால் வைடு லைனை ஒட்டி மிகவும் விலக்கி வீசிவிட்டார். அந்த பந்தை நான் அடித்தே தீர வேண்டும். அதனால் கஷ்டப்பட்டு அடித்துவிட்டேன் என்றார். 

மறுமுனையில் நிற்பது தோனி என்றால், அவரது ஆலோசனையை பின்பற்றினால் யாராக இருந்தாலும் சிக்ஸர் அடிக்கலாம். 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்