சூப்பரான ஆள ஓரமா உட்கார வச்சா நீங்க எப்படி ஜெயிக்க முடியும்..? மும்பை இந்தியன்ஸ் அணி முதல்ல அவர டீம்ல எடுக்கணும்

By karthikeyan VFirst Published Apr 3, 2019, 6:03 PM IST
Highlights

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் எதிரும் புதிருமான அணிகள் என்பதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

3 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் சிறந்ததாக அமையவில்லை. இந்த சீசனிலும் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. 

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் எதிரும் புதிருமான அணிகள் என்பதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்த சீசனில் யுவராஜ் சிங்கை அணியில் எடுத்துள்ளதால், அவருக்கே ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால் கடந்த சீசனில் மும்பை அணியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷானுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் உள்ளார். ரோஹித்தும் டி காக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையிலும் யுவராஜ் சிங் 4ம் வரிசையிலும் இறங்குகின்றனர். இவர்களை அடுத்து பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகியோர் இருக்கின்றனர். அதனால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆனால் இஷான் கிஷான் நல்ல வீரர். கடந்த சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பிங்கும் நன்றாக செய்யக்கூடியவர். எனவே இஷான் கிஷானை அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. 

மும்பை அணி கண்டிப்பாக சில மாற்றங்களை செய்தாக வேண்டும் எனவும் திறமையான இளம் வீரரான இஷான் கிஷானை அணியில் கண்டிப்பகா எடுக்க வேண்டும் எனவும் ரோஹன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!