மும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட்.. அதிரடி பேட்டிங்கின் முழு வீடியோ

By karthikeyan VFirst Published Mar 25, 2019, 10:02 AM IST
Highlights

உலகின் நம்பர் 1 பவுலரும் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பவுலிங்கையே வெளுத்து வாங்கிவிட்டார். 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். 

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, டெல்லி கேபிடள்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். டெல்லி கேபிடள்ஸ் அணியின் தவானும் இங்கிராமும் இணைந்து நன்றாக ஆடினர். இங்கிராமின் விக்கெட்டுக்கு பிறகு 5வது வீரராக களத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் சோபிக்காத நிலையில், நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் எப்படி ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு குறை வைக்காமல் அடித்து நொறுக்கினார் ரிஷப் பண்ட். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். உலகின் நம்பர் 1 பவுலரும் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பவுலிங்கையே வெளுத்து வாங்கிவிட்டார். 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் டெல்லி கேபிடள்ஸ் அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடினார் யுவராஜ் சிங். எனினும் அவரால் இலக்கை விரட்டமுடியவில்லை. கடைசியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது. ரிஷப் பண்ட்டின் அதிரடி இன்னிங்ஸ் வீடியோ இதோ...

Rishabh Pant's 27-ball 78* rampage https://t.co/6UhODtEgZd via

— Srinivas Reddy (@Sriniva27039143)
click me!