இதுவரை ஆர்சிபி சந்திக்காத 2 அவமானங்களை பரிசளித்த மும்பை இந்தியன்ஸ்!!

Published : Mar 29, 2019, 05:07 PM IST
இதுவரை ஆர்சிபி சந்திக்காத 2 அவமானங்களை பரிசளித்த மும்பை இந்தியன்ஸ்!!

சுருக்கம்

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. எனினும் முதல் 2 போட்டிகளிலும் தோற்று, இந்த சீசனை கடும் தோல்வி முகத்துடன் தொடங்கியுள்ளது.   

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, அவரை பெரிய ஷாட்டுகளை அடிக்கவிடாமல், கடைசி இரண்டு ஓவர்களில் அவரை கட்டுப்படுத்தி, ஆர்சிபி அணியை 181 ரன்களில் சுருட்டி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. எனினும் முதல் 2 போட்டிகளிலும் தோற்று, இந்த சீசனை கடும் தோல்வி முகத்துடன் தொடங்கியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸிடம் தோற்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் விரும்பத்தகாத 2 சம்பவங்களுக்கு ஆளாகியுள்ளது ஆர்சிபி அணி. 

1. இதுவரை ஒரு சீசனில் கூட முதல் இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி தோற்றதில்லை. இதுதான் முதன்முறை. முதல் போட்டியில் சிஎஸ்கேவிடமும் இரண்டாவது போட்டியில் மும்பையிடமும் தோற்றுள்ளது. 

2. அதேபோல டிவில்லியர்ஸ் கடைசிவரை களத்தில் இருந்த எந்த போட்டியிலும் இலக்கை விரட்ட முடியாமல் ஆர்சிபி அணி தோற்றதில்லை. அதிலும் இதுதான் முதன்முறை. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்