ஒரு ரன்னுகூட உன்னால அடிக்க முடியல.. ஜடேஜாவை பார்த்து நக்கலா சிரித்த கோலி!!இந்த ஒரு சிரிப்பே சிஎஸ்கே-வை தோற்கடிச்சதுக்கு சமம்

By karthikeyan VFirst Published Mar 24, 2019, 3:37 PM IST
Highlights

அந்த 71 ரன்கள் என்ற மிக எளிய இலக்கையே 18வது ஓவரில்தான் சிஎஸ்கே அணி எட்டியது. அந்தளவிற்கு சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இலக்கு எளிதானதுதான் என்பதால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். ஆனால் முடிந்தளவிற்கு வெற்றியை தள்ளிப்போட வேண்டும் என்ற முனைப்பில் தான் ஆர்சிபி அணி பந்துவீசியது.

ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட் ஹோம், ஷிவம் துபே என அனுபவம் மற்றும் இளமை நிறைந்த கலவையிலான அதிரடி பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தும் வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பார்த்திவ் படேலை தவிர வேறு யாருமே இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர் உட்பட அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆர்சிபி அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். 

அந்த 71 ரன்கள் என்ற மிக எளிய இலக்கையே 18வது ஓவரில்தான் சிஎஸ்கே அணி எட்டியது. அந்தளவிற்கு சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இலக்கு எளிதானதுதான் என்பதால் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும். ஆனால் முடிந்தளவிற்கு வெற்றியை தள்ளிப்போட வேண்டும் என்ற முனைப்பில் தான் ஆர்சிபி அணி பந்துவீசியது. கேப்டன் விராட் கோலியும் எண்ணமும் அதுதான். அது ஈடேறியது என்றே சொல்ல வேண்டும். 

71 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கே அணி விரட்டிய போது ஷேன் வாட்சன், ரெய்னா, ராயுடு ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்தது. 15வது ஓவரில் ராயுடு ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஒரு ஓவரிலோ அல்லது அதற்கு அடுத்த ஓவரிலோ வெற்றிக்கு தேவையான 8 ரன்களை அடித்திருக்கலாம். ஆனால் சிராஜ் வீசிய 17வது ஓவரில் ஜடேஜா ஒரு ரன் கூட அடிக்கவில்லை. 17வது ஓவர் மெய்டன் ஆனது. 18வது ஓவரின் முதல் பந்தில் கேதர் ஜாதவ் சிங்கிள் தட்ட, அதன்பிறகு தொடர்ச்சியாக இரண்டு பந்துகளை அடிக்க முயன்று தவறவிட்டார் ஜடேஜா. ஒரு ரன் அடிப்பதற்கே மூன்று பந்துகளை ஆடினார். 

18வது ஓவரின் முதல் பந்தில் ஜாதவ் சிங்கிள் தட்ட, அடுத்த பந்து வைடு. எனவே வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதற்கே மூன்று பந்துகள் எடுத்துக்கொண்டார் ஜடேஜா. அந்த ஓவரின் இரண்டாவது பந்தை அடிக்கத்தவறிய ஜடேஜா, மூன்றாவது பந்தையும் அடிக்காமல் விட்டதும், ஆர்சிபி கேப்டன் கோலி நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில், ஒரு ரன் அடிக்க இவ்வளவு பாடா? என்ற கேள்வியும் உன்னையலாம்(ஜடேஜா) வச்சுகிட்டு என்ன பண்றது என்ற கேள்வியும் மனதுக்குள் எழுந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஒருவழியாக அந்த ஓவரின் நான்காவது பந்தை அடித்து அணியை வெற்றி பெற செய்தார் ஜடேஜா. 

click me!