சிங்கத்தை அதோட குகையிலே சந்திக்கும் சின்ன பசங்க டீம்!! மிரட்டல் பாய்ஸ் எல்லாருமே ஆடுறாங்க.. உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி

By karthikeyan VFirst Published Mar 24, 2019, 3:05 PM IST
Highlights

3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேபிடள்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மோதுகின்றன.

3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேபிடள்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது. வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே டெல்லி அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஒன்று. இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற உறுதியில் அந்த அணி உள்ளது. அதனால்தான் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளபோதிலும், மற்றொரு ஜாம்பவானான கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட துடிப்பான அணியாக உள்ளது டெல்லி கேபிடள்ஸ். அந்த அணியில் இருக்கும் மேக்ஸ்வெல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நாட்டுக்காக ஆடிவருகிறார். அதனால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு என்று கூறமுடியாவிட்டாலும், அவர் ஆடினால் கூடுதல் பலமாக இருந்திருக்கும். 

அதேநேரத்தில் விஜய் சங்கர் உள்ளிட்ட 3 வீரர்களை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு ஷிகர் தவானை அணியில் இணைத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ். அந்த வகையில், ஷிகர் தவானும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்குவர். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து இறங்குவர். கோலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லாமிச்சன்னே, டிரெண்ட் போல்ட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் களமிறங்க வாய்ப்புள்ளது. 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி, கோலின் இங்கிராம், கிறிஸ் மோரிஸ், டெவெட்டிய, சந்தீப் லாமிச்சன்னே, டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா. 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி என பெரும்பாலானோர் டெல்லி அணியில் இருக்கும் நிலையில், இவர்கள் அனைவருமே இன்றைய போட்டியில் ஆடுவார்கள். 
 

click me!