#RCBvsSRH இரு அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.. உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 31, 2020, 6:03 PM IST
Highlights

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், விறுவிறுப்பான கட்டத்தில் இப்போது உள்ளது. லீக் சுற்று 3 நாட்களில் முடியவுள்ள நிலையில், இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது.

எஞ்சிய 3 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆறு அணிகளுக்கும் உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது.

12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், விஜய் சங்கருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா ஆடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சங்கர் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. எனவே அவருக்கு பதிலாக பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்ட் ஆப்சனாக இருக்கும் அபிஷேக் ஷர்மா தான் சேர்க்கப்படுவார். ப்ரியம் கர்க்கிற்கு வாய்ப்பில்லை.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

வார்னர்(கேப்டன்), சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, வில்லியம்சன், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

ஆர்சிபி அணியில் ஷிவம் துபேவிற்கு பதிலாக நவ்தீப் சைனியும், டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக ஆடம் ஸாம்பாவும் இன்று களமிறங்கக்கூடும்.

உத்தேச ஆர்சிபி அணி:

தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மன், கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா.
 

click me!