கடைசி நேர அதிரடி.. ஒற்றை கையில் சிக்ஸர்.. பழைய பொல்லார்டு திரும்பி வந்துட்டாரு!! வீடியோ

By karthikeyan VFirst Published Apr 7, 2019, 11:16 AM IST
Highlights

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் 12வது சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ப்பாட்டமான வெற்றியுடன் தொடங்கவில்லை என்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுள்ளது. 

3 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை. அதனால் இந்த சீசனில் சிறப்பாக ஆடும் முனைப்பில் களம் கண்டது. 

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அந்த அணி 3 முறை கோப்பையை வென்றபோதும் அதில் அபாரமான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பொல்லார்டு. ஆனால் அவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. மும்பை அணியின் நட்சத்திர வீரரான பொல்லார்டு சரியாக ஆடாததும் அவர் ஒரு காரணம்.

அதிரடியான பேட்டிங், நல்ல பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் பொல்லார்டு. ஒன்றில் இல்லாவிட்டாலும் மற்றொன்றில் தனது சிறப்பான பங்களிப்பை செய்துவிடுவார். ஆனால் கடந்த சீசனில் சரியாக ஆடாத நிலையில், இந்த சீசனில் நன்றாகவே ஆடிவருகிறார். 

முதல் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த 2 போட்டிகளிலுமே பொல்லார்டு நன்றாக ஆடினார். பொல்லார்டு நன்றாக ஆடினால் மும்பை அணி வென்றுவிடும் என்பதற்கு இந்த 2 போட்டிகளும் கூடுதல் உதாரணங்கள். 

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். டெத் ஓவர்களில் பொல்லார்டு அடித்து ஆடி அணியின் ரன்னை உயர்த்தினார். பொல்லார்டு 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்தார். பொல்லார்டின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்கள் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப்பின் அபாரமான பவுலிங்கால் 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் பொல்லார்டு கடைசி 2 ஓவர்களில் ஆடிய அதிரடி ஆட்டம், அந்த அணிக்கு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விலக்கி வீசப்பட்டது. அந்த பந்தை அடிக்கும்போது பேலன்ஸ் மிஸ் ஆகி பொல்லார்டின் ஒரு கை பேட்டில் இருந்து விலகியது. எனினும் அந்த பந்து சிக்ஸருக்கு சென்றது. அதுதான் பொல்லார்டின் பவர். அந்த வீடியோ இதோ.. 

click me!