ரோஹித் - டி காக் அபார தொடக்கம்.. கடைசி நேரத்தில் பாண்டியா காட்டடி!! ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Apr 13, 2019, 5:58 PM IST
Highlights

அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குயிண்டன் டி காக் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி மிரட்டினார். 11 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை குவித்து இன்னிங்ஸை அதிரடியாக முடித்துவைத்தார்.

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் ஆடியது. மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 16 ரன்களில் குல்கர்னியின் பந்தில் போல்டாகி ஏமாற்றினார். இதையடுத்து களத்திற்கு வந்த பொல்லார்டு மந்தமாக ஆடினார். 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, மிடில் ஓவர்களில் மந்தமாக ஆடியது. 

அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குயிண்டன் டி காக் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி மிரட்டினார். 11 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை குவித்து இன்னிங்ஸை அதிரடியாக முடித்துவைத்தார். கடைசிநேர ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 187 ரன்களை குவித்தது. 

பும்ரா, அல்ஸாரி ஜோசப், பெஹ்ரெண்டோர்ஃப், ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 188 ரன்களை எடுப்பது என்பது கடினமான விஷயம்தான். ராஜஸ்தான் அணி இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால், ரஹானேவும் பட்லரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும். 

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய ஆர்ச்சர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
 

click me!