மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடி மேல் அடி!! என்ன செய்றதுனே தெரியாமல் திகைத்து நிற்கும் அணி நிர்வாகம்

By karthikeyan VFirst Published Mar 23, 2019, 10:41 AM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் வெளியேறியது. 
 

ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்குகிறது. 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் இன்று தொடங்குகிறது. 

இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் கோலி தலைமையிலான ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல் வெளியேறியது. 

கடந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றது. கடைசி 7 போட்டிகளில் 4ல் வென்றது மும்பை இந்தியன்ஸ். எனினும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. கடந்த சீசனில் மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் குறைகளாக இருந்தன. எனவே அதை களைவதற்காக, கடந்த சீசனில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த மலிங்காவை மீண்டும் அணியில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ். மேலும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே ஆகிய இருவரையும் அணியில் எடுத்தது.

ஆனால், இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் மலிங்கா, உலக கோப்பைக்கு முன்னதாக உள்நாட்டு போட்டியில் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இலங்கையில் உள்நாட்டு ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. அதில் கண்டிப்பாக மலிங்கா ஆட வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக தெரிவித்துவிட்டதால், மலிங்கா அந்த தொடரில் ஆட உள்ளார். அதனால் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7-8 போட்டிகளில் ஆட முடியாது. 

மலிங்கா ஒதுங்கியுள்ள நிலையில், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே 2 ஃபாஸ்ட் பவுலர்கள் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மெக்லநெகன், பெஃப்ரெண்டோர்ஃப் மற்றும் பென் கட்டிங் ஆகிய மூவர் மட்டுமே வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களாக உள்ளனர். மும்பை அணியில் பும்ரா இருப்பது அணிக்கு பலம் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிதும் நம்பியிருந்த மலிங்கா மற்றும் மில்னே ஆகிய இருவரும் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. 
 

click me!