ஒரு ஆளால எல்லாம் கோப்பைய ஜெயிக்க முடியாது!! காம்பீருக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் பதிலடி

By karthikeyan VFirst Published Mar 23, 2019, 9:54 AM IST
Highlights

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணிக்குத்தான் ஆடிவருகிறார் கோலி. 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றதிலிருந்து 96 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 44 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 2016ம் ஆண்டில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 
 

கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம் ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி சொதப்பிவந்தார். அண்மைக்காலமாக அவர் கேப்டன்சியில் மேம்பட்டிருப்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் தான் இன்னும் மேம்படாததை ஆஸ்திரேலிய தொடரில் அவரே மீண்டும் வெளிப்படுத்தினார். 

கள வியூகம் மற்றும் பவுலிங் சுழற்சியில் ஜீரோவாகத்தான் இருக்கிறார். அதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவரே உலகிற்கு காட்டினார். சர்வதேச அளவில் தலைசிறந்த வீரராக திகழும் கோலி, கேப்டன்சியில் படுமோசமாக சொதப்புகிறார். 

கோலி ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்பதை ஐபிஎல்லில் அவரது செயல்பாடுகளும் வெற்றி விகிதமுமே நமக்கு உணர்த்தும். டிவில்லியர்ஸ் என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை ஆர்சிபி அணிக்கு வென்று கொடுக்க முடியவில்லை. 

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணிக்குத்தான் ஆடிவருகிறார் கோலி. 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றதிலிருந்து 96 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 44 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 2016ம் ஆண்டில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 

ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் உள்ளது. அந்த அணி கோப்பையை வெல்லாததற்கு கோலியின் மோசமான கேப்டன்சியும் ஒரு காரணம். கோலி நல்ல பேட்ஸ்மேன் தான். ஆர்சிபி அணிக்காக நன்றாக ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரெய்னாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். ஆனால் கேப்டன்சியில் கோலியின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. கோலியின் மோசமான கேப்டன்சிதான் அந்த அணியால் ஒருமுறைகூட கோப்பை வெல்ல முடியாததற்கு காரணம் என்பது அந்த அணி நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கும். ஆனால் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து அந்த அணி நிர்வாகம் தூக்கவில்லை.

கோலி கேப்டன்சியில் படுமோசமாக சொதப்பும் நிலையில், ரோஹித் சர்மா ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். தோனிக்கு நிகரான வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். ஐபிஎல்லில் 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியே ஆர்சிபி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும்தான். 

இந்நிலையில், கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் காம்பீர். கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய காம்பீர், கோலி ஒரு கேப்டனாக இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. கோலி உத்தி ரீதியாக மிகவும் மோசமாக செயல்படுகிறார். அதனால் தான் அவரால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்கள்லாம் இருக்கிறார்கள். தோனியும் ரோஹித்தும் அவர்களின் அணிகளுக்கு மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்கள். தோனி மற்றும் ரோஹித்துடன் கோலியை ஒப்பிட முடியாது. 7 ஆண்டுகளாக கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரது கேப்டன்சி மோசமாக இருந்தும் கூட அவரை இன்னும் கேப்டன்சியிலிருந்து தூக்காததற்காக அந்த அணி நிர்வாகத்திற்கு கோலி நன்றி சொல்ல வேண்டும் என்று காம்பீர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

கோலியை விமர்சித்திருந்த காம்பீருக்கு கங்குலி ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிளெமிங், ஒரு தனி நபரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. இது மிகவும் கடுமையான போட்டி நிறைந்த தொடர். ஐபிஎல் அணிகள் ஸ்மார்ட்டாக சிந்திப்பதாலும் செயல்படுவதாலும் ஒவ்வொரு சீசனுமே மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே இருக்கிறது. ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்களும் அணி நிர்வாகத்தினரும் ஒவ்வொரு வீரரை எடுப்பது முதல் அவர்களை ஒரு அணியாக உருவாக்குவதை வரை மிகவும் விவேகமாக செயல்படுகின்றனர். அதனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதாலேயே மட்டும் ஒருவரால் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 

click me!