மனீஷ் பாண்டேவை ஸ்லெட்ஜிங் செய்து மூக்குடைபட்ட கோலி..! வீடியோ

Published : Nov 07, 2020, 06:28 PM IST
மனீஷ் பாண்டேவை ஸ்லெட்ஜிங் செய்து மூக்குடைபட்ட கோலி..! வீடியோ

சுருக்கம்

சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மனீஷ் பாண்டேவை ஸ்லெட்ஜிங் செய்து மூக்குடைபட்டார் ஆர்சிபி கேப்டன் கோலி.  

ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடிக்க, 132 ரன்கள் என்ற இலக்கை வில்லியம்சனின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஹோல்டரின் கடைசிநேர அதிரடியால் கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

இந்த போட்டியில் இலக்கு எளிது என்பதால் நிதானமாகவே ஆடியது சன்ரைசர்ஸ் அணி. அந்தவகையில், நிதானமாக ஆடிய மனீஷ் பாண்டேவை, இவன் பெரிய ஷாட்டே ஆடமாட்டான் என்று கோலி ஸ்லெட்ஜ் செய்ய, அடுத்த பந்தே சிக்ஸருக்கு விளாசி கோலியின் மூக்கை உடைத்தார் மனீஷ் பாண்டே.

சிராஜ் வீசிய 3வது ஓவரில் மனீஷ் பாண்டே அடுத்தடுத்து தடுப்பாட்டம் ஆட, இவன் பெரிய ஷாட் ஆடமாட்டான் என்று கோலி ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கடுத்து சிராஜின் ஓவரிலேயே சிக்ஸரை விளாசி கோலிக்கு பதிலடி கொடுத்தார் மனீஷ் பாண்டே. 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவை சீண்ட நினைத்து மூக்குடைபட்ட கோலி, மனீஷ் பாண்டேவிடமும் மூக்குடைபட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்