நண்பன்லாம் களத்துக்கு வெளியிலதான்.. போட்டினு வந்துட்டா பொளந்து கட்டிருவேன்!! ஹர்திக் பாண்டியாவை தெறிக்கவிட்ட ராகுல்

Published : Apr 11, 2019, 10:45 AM IST
நண்பன்லாம் களத்துக்கு வெளியிலதான்.. போட்டினு வந்துட்டா பொளந்து கட்டிருவேன்!! ஹர்திக் பாண்டியாவை தெறிக்கவிட்ட ராகுல்

சுருக்கம்

இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக ஆடினார். ராகுலுக்கு மிகவும் முக்கியமான மற்றும் தேவையான இன்னிங்ஸ் இது. அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த சீசனில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த பரபரப்பான போட்டியாக அமைந்தது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 197 ரன்களை குவித்தது. 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தனி ஒருவனாக களத்தில் நின்று அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக ஆடினார். ராகுலுக்கு மிகவும் முக்கியமான மற்றும் தேவையான இன்னிங்ஸ் இது. அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கெய்லும் ராகுலும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 116 ரன்களை குவித்தனர். கெய்ல் 63 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கருண் நாயர், டேவிட் மில்லர், சாம் கரன் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். 

ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்ற ராகுல், மிடில் ஓவர்களில் நிதானமாக இருந்து பொறுமை காத்தார். டெத் ஓவர்கள் வரை அவர் களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொறுமை காத்த ராகுல், ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார். தனது நெருங்கிய நண்பனான ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களை குவித்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவர்தான் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தது. 

ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் நெருங்கிய நண்பர்கள். அண்மையில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தடை பெற்று மீண்டும் அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் கூட இருவரும் ஜெர்சியை மாற்றி அணிந்துகொண்டனர். தனது நெருங்கிய நண்பனான பாண்டியாவின் பந்தை பொளந்து கட்டிவிட்டார் ராகுல். என்னதான் நட்பாக இருந்தாலும் களத்திற்கு வெளியேதானே.. 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்