அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலை அம்போனு நிற்கவிட்ட சிஎஸ்கே பவுலர்

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 4:42 PM IST
Highlights

கேகேஆர் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசலை டெத் ஓவரில் வைத்து செம சம்பவம் செய்தார் சிஎஸ்கே ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர். 

நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. பேட்டிங்கை விட பவுலிங்கில் மிரட்டலாக செயல்படுகிறது. லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகியோர் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், பிராவோவும் காயமடைந்து 2 வாரங்களுக்கு ஆடமுடியாமல் ஓய்வில் இருக்கிறார். ஆனால் இவர்களின் விலகல் சிஎஸ்கே அணியை எந்தளவிலும் பாதிக்கவில்லை. 

கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தீபக் சாஹர், இந்த சீசனிலும் அபாரமாக வீசிவருகிறார். கேகேஆர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, சிஎஸ்கேவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்தது. 109 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரில் எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா ஆகிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சாஹர். அதுமட்டுமல்லாமல் அவர் வீசிய 4 ஓவர்களில் 20 பந்துகளில் ரன்னே கொடுக்கவில்லை. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பவுலர் வீசியதில் 20 டாட் பந்துகள் என்பதுதான் அதிகபட்ச டாட் பந்துகள். இதற்கு முன்னதாக நெஹ்ராவும் முனாஃப் படேலும் 19 டாட் பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்து தீபக் சாஹர் சாதனை படைத்துள்ளார். 

டெத் ஓவர்களில் தெறிக்கவிடும் ஆண்ட்ரே ரசல் களத்தில் இருந்தும்கூட, 19வது ஓவரில் 5 பந்துகளில் ரன் எடுக்க விடாமல் வீசினார் தீபக் சாஹர். ஒருமுனையில் கேகேஆர் அணியின் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ஆண்ட்ரே ரசல், டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் முனைப்பில் களத்தில் நின்றார். ஆனால் சாஹர் வீசிய 19வது ஓவரில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே கொடுத்தார். எஞ்சிய 5 பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை சாஹர். அதிரடி மன்னன் ரசல் களத்தில் நின்றும், டெத் ஓவரில் அவரை அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்தினார் தீபக் சாஹர். இது சாதாரண விஷயமல்ல. 
 

click me!