புலி பதுங்குறது பாய்றதுக்குடா.. காத்திருந்து ராஜஸ்தான் அணியை கதறவிட்ட தோனி!! தான் ஒரு லெஜண்ட்னு மறுபடியும் நிரூபித்த தல

By karthikeyan VFirst Published Apr 1, 2019, 11:04 AM IST
Highlights

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் என்றைக்குமே பெஸ்ட் ஃபினிஷர் தான் என்றும் கிரிக்கெட்டில் தான் ஒரு லெஜண்ட் என்பதையும் மீண்டுமொரு நிரூபித்துள்ளார். 
 

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் என்றைக்குமே பெஸ்ட் ஃபினிஷர் தான் என்றும் கிரிக்கெட்டில் தான் ஒரு லெஜண்ட் என்பதையும் மீண்டுமொரு நிரூபித்துள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, ராயுடு, வாட்சன், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை 27 ரன்களுக்கே இழந்துவிட்டது. எனினும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களை குவித்தது. 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி வெற்றியை நோக்கி சென்றார். பிராவோ கடைசி ஓவரை அபாரமாக வீசி ஸ்டோக்ஸை வீழ்த்தியதோடு ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. 

இந்த போட்டியில் தோனி அருமையாக பேட்டிங் ஆடினார். ராயுடு, வாட்சன், கேதர் ஆகிய 3 விக்கெட்டுகளையும் 27 ரன்களுக்கே இழந்துவிட்ட நிலையில், ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார்.  விரைவில் ரன் குவிக்க வேண்டும் என்று அவசரப்படவில்லை. கடைசி வரை களத்தில் நிற்பதுதான் முக்கியம்; அப்படி நின்றுவிட்டால் கடைசி ஓவர்களில் அடித்துவிடலாம் என்பது தோனிக்கு தெரியும். அதேநேரத்தில் அவசரப்பட்டு விரைவில் அவுட்டாகிவிட்டால் எஞ்சிய ஓவர்கள் வீணாகிவிடும். ஸ்கோரும் குறைந்துவிடும் என்பது தோனிக்கு தெரியும். 

அதனால் அவசரப்படாமல் நிதானமாக ஆடினார். 10 ஓவருக்கு சென்னை அணி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரெய்னா, 36 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும் பொறுமை காத்தார் தோனி. 

17 ஓவரின் முடிவில் சென்னை அணி வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குல்கர்னி வீசிய 18வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும் பிராவோ ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு பிராவோவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். உனாத்கத் வீசிய கடைசி ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸரையும் தோனி 3 சிக்ஸர்களையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் என்ற நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது சென்னை அணி.

கடைசி ஓவர் வரை தோனி பொறுமை காத்ததால் தான் இந்த ஸ்கோர் சாத்தியமானது. இல்லையெனில் அதிகபட்சம் 140-150 ரன்களே வந்திருக்கும். ஏனெனில் சிஎஸ்கே அணியின் நிலை நடு ஓவர்களின் ரன்ரேட்டுகளின் அடிப்படையில் அப்படித்தான் இருந்தது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் முடிந்தவரை ஸ்கோரை உயர்த்திவிடலாம். ஆனால் அதற்கு நாம் களத்தில் இருக்க வேண்டும் என்று பொறுமை காத்த தோனி, கடைசி ஓவரில் பொளந்து கட்டிவிட்டார். வேறு யாராக இருந்திருந்தாலும் 15 அல்லது 16வது ஓவர்களில் அவசரப்பட்டு அவுட்டாகியிருக்கக்கூடும். 

கடைசி ஓவரில் தோனி அடித்த அடிதான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்துவிட்டது. 
 

click me!