தோனி எப்போதுமே மிகப்பெரிய ஆச்சரியம்.. பிசினஸ் கிளாஸ் சீட்டைவிட மனுஷங்கதான் முக்கியம்..! வீடியோ

By karthikeyan VFirst Published Aug 22, 2020, 5:05 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஜார்ஜ் ஜான், கேப்டன் தோனியின் செயலால் நெகிழ்ந்து போயுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. சிஎஸ்கே அணி நேற்று புறப்பட்டு சென்றது. கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், கரன் ஷர்மா, கேதர் ஜாதவ் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களும், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி, அணி நிர்வாகத்தினர் என மொத்தம் 60 பேர் தனிவிமானத்தில் சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர். 

தோனி உலகமே கொண்டாடும் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும், அதையெல்லாம் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் எப்போதுமே எளிமையாக இருக்கும் நல்ல மனிதர். பொதுவாக தனது தனித்துவமான செயல்பாடுகள், நல்ல மனதுடன் செய்யும் காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அனைவரின் மனதிலும் இடம்பெறும் தோனி, இந்த பயணத்திலும் அப்படியொரு செயலை செய்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.

சிஎஸ்கே அணி சென்ற தனிவிமானத்தில் கேப்டன் தோனிக்கு பிசினஸ் கிளாஸ் சீட். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிஎஸ்கே அணியின் இயக்குநர் கே.ஜார்ஜ் ஜான் உயரமானவர். அவருக்கு எகானமி கிளாஸ் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எகானமி கிளாஸ் சீட்டில் அமர்வது கஷ்டம் என்பதை அறிந்த தோனி, உங்களது கால் நீளம்; எனவே நீங்கள் எனது சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்; நான் உங்கள் சீட்டில் அமர்ந்துகொள்கிறேன் என்று சொல்லி, ஜார்ஜுக்கு தனது பிசினஸ் கிளாஸ் சீட்டை கொடுத்துள்ளார் தோனி. 

தோனியின் இந்த செயலால் நெகிழ்ந்துபோன ஜார்ஜ், அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தோனியை தன்னை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தோனியின் இந்த செயலை அறிந்து அவரது ரசிகர்கள் அவரை மீண்டும் ஒருமுறை கொண்டாடி வருகின்றனர்.
 

When a man who’s seen it all, done it all in Cricket tells you, “Your legs are too long, sit in my seat (Business Class), I’ll sit in Economy.” The skipper never fails to amaze me. pic.twitter.com/bE3W99I4P6

— george (@georgejohn1973)
click me!