ஒற்றை ஸ்டம்பை துல்லியமான யார்க்கரால் 3 முறை கழட்டி வீசிய பும்ரா!! எதிரணிகளை தெறிக்கவிடும் வீடியோ

Published : Mar 22, 2019, 02:47 PM IST
ஒற்றை ஸ்டம்பை துல்லியமான யார்க்கரால் 3 முறை கழட்டி வீசிய பும்ரா!! எதிரணிகளை தெறிக்கவிடும் வீடியோ

சுருக்கம்

டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. டெத் ஓவர்களில் அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிவதற்கான காரணங்களில் ஒன்று அவரது யார்க்கர். டெத் ஓவர்களில் பும்ரா யார்க்கர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார்.

பொதுவாக பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பும்ராவின் வருகை. இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழும் பும்ரா, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலராக வலம்வருகிறார். 

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்டுள்ள பும்ரா, குறைந்த தூரமே ஓடி நல்ல வேகத்தை ஜெனரேட் செய்கிறார். பந்துக்கு பந்து வெரைட்டி, நல்ல வேகம், துல்லியமான யார்க்கர் என மிரட்டலாக பந்துவீசி, எதிரணிகளை திணறடித்து வருகிறார். 

குறிப்பாக டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. டெத் ஓவர்களில் அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிவதற்கான காரணங்களில் ஒன்று அவரது யார்க்கர். டெத் ஓவர்களில் பும்ரா யார்க்கர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். பும்ராவின் யார்க்கர் கொஞ்சம் கூட குறி தவறாமல் மிக துல்லியமாக இருக்கும். 

உலக கோப்பையில் பும்ரா முக்கிய பங்காற்றுவார் என்பதில் ஐயமில்லை. இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக உலக கோப்பையில் திகழப்போவது பும்ரா தான். பும்ராவின் பவுலிங் உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் நடக்கிறது. நாளை ஐபிஎல் 12வது சீசன் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழும் பும்ரா, பயிற்சியின் போது துல்லியமான யார்க்களால் ஒற்றை ஸ்டம்பை மூன்று முறை கழட்டிவீசினார். பும்ராவின் அபாரமான பவுலிங்கை கண்டு அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட், பும்ராவை கட்டித்தழுவினார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்