அஷ்வின் செய்த தரமான சம்பவம்.. ஷேன் வார்னே கடும் எதிர்ப்பு.. ராகுல் டிராவிட் ஆதரவு

By karthikeyan VFirst Published Mar 27, 2019, 11:10 AM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த திங்கட்கிழமை நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கெய்லின் அதிரடியான 79 ரன்கள் மற்றும் கடைசி நேரத்தில் சர்ஃபராஸ் கானின் சாமர்த்தியமான பேட்டிங்கின் காரணமாக 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. 

185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்து மிரட்டலாக ஆடிக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்த முடியாமல் பஞ்சாப் அணி திணறிக்கொண்டிருந்த வேளையில், 13வது ஓவரை வீசிய அஷ்வின், பட்லரை மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தார். 

அஷ்வின் பந்துவீச வரும்போதே பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியிருந்தார். அதைக்கண்ட அஷ்வின் பந்தை போடாமல் ஸ்டம்பில் அடித்து பட்லரை ரன் அவுட் செய்தார். தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தார். அதனால் கடும் அதிருப்தியில் வெளியேறினார் பட்லர். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. 

அஷ்வினின் இந்த செயல் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அஷ்வினின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்துவருகிறது. பட்லரை ரன் அவுட் செய்த விதத்திற்காக அஷ்வினை ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே, பட்லரை அஷ்வின் அவுட்டாக்கிய விதம் வெறுக்கத்தக்கது. கேப்டன் என்ற முறையில் அஷ்வினின் செயல் ஏமாற்றத்தை தந்தது. பட்லர் விஷயத்தில் அஷ்வின் பந்துவீச வேண்டும் என்று வரவில்லை. பட்லரை அவுட்டாக்கும் எண்ணத்தில்தான் வந்தார். அதனால்தான் பந்துவீச தாமதம் செய்து பட்லரை ரன் அவுட் செய்தார். அதை டெட் பாலாக அறிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் பிரீமியர் தொடருக்கு நல்லதல்ல. எப்படியாவது என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை மாற வேண்டும். விளையாட்டு உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அஷ்வின் செய்தது விதிப்படி சரிதான் என முன்னாள் வீரர்கள் வாதிட்டாலும், இதுபோன்ற முறைப்படி மற்ற வீரர்களை ஏன் அவுட் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏன் செய்யவில்லை என்றால், அப்படி செய்வது அவமானகரமானது என்பது எல்லாருக்கும் தெரியும் என அஷ்வினை கடுமையாக சாடியுள்ளார். 

அஷ்வினின் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், அஷ்வின் செய்த ரன் அவுட் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான். ஆனால் ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம். ஆனாலும் அஷ்வின் செய்தது தவறு கிடையாது. விதிகளுக்கு உட்பட்டு அஷ்வின் செய்த ரன் அவுட்டை வைத்து, அவரது கேரக்டரை தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜெண்டில்மேனா இல்லையா என்பதை, இதை வைத்தெல்லாம் தீர்மானிக்க முடியாது என்று டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!