ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை ஆதாருடன் உறுதிப்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது
ஆதார் அட்டை என்பது இந்திய மக்களுக்கு பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் வழங்கும் பணிகளை மேற்கொள்கிறது. வங்கிக்கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தல் மற்றும் அரசின் மானியங்கள் அல்லது நலத்திட்ட உதவிகளை பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளம் மற்றும் முகவரி சான்றாக ஆதார் அட்டை செயல்படுகிறது.
இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ, மக்கள் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை ஆதாருடன் உறுதிப்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. யுஐடிஏஐ-ன் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு இரண்டிலும் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த முடியும். எந்த மொபைல் எண்ணில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தங்களுக்குத் உறுதியாக தெரியவில்லை என்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் புகார் செய்ததை அடுத்து இந்த புதிய அம்சத்தை யுஐடிஏஐ அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : கருணாநிதி ஆட்சி கால அரசாணையையே நிறைவேற்றாத ஸ்டாலின்.! தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்.? ஓபிஎஸ்
ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது..?
இருப்பினும், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க, மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்