கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கூடி குறைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் 3ஆயிரத்து 720 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்த நிலையில், தற்போது தான் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் பதிவாகியிருந்தது. இந்தநிலையில் மீண்டும் அதிகரித்த கொரோனாவானது ஒரே நாளில் 13ஆயிரத்தை தொட்டது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்குள் வந்தது.
undefined
கூடி குறையும் கொரோனா
இந்தநிலையில் இந்தியாவில் நேற்று, 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,720 ஆக சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175-லிருந்து 40,177 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து7,698 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
தூக்க அசதியில் வேனை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த ஓட்டுநர்; காயங்களுடன் உயிர் தப்பிய 13 பயணிகள்