இன்று இந்த இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கப்போகுது.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

By Ramya sFirst Published May 3, 2023, 11:57 AM IST
Highlights

இன்று முதல் 5 நாட்களுக்கு நாடு முழுவதும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த 5 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 14 க்குப் பிறகு வெப்பநிலை உயரத் தொடங்கும், இதனால் பல இடங்களில் வெப்ப அலை நிலைகள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு இந்தியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை, மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது, பரவலான மழை/பனிப்பொழிவு மிகவும் பரவலாக இருக்கும்.

இதையும் படிங்க : சென்னை மெட்ரோவில் இனி சைக்கிள்களை எடுத்து செல்ல முடியாது.. என்ன காரணம்..?

அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து மே 6 முதல் மேற்கு இமயமலைப் பகுதியில் பரவலான மழை/பனிப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல்  ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ என்ற அளவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் “ மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிழக்கு இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை,  பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் இந்திய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு  பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் நாளையும் மற்றும் தெற்கு உள் கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உறவுகளை பேணுவதில் இந்தியா முதலிடம்.. இந்த நாடுகளில் தான் விவாகரத்து வழக்குகள் அதிகம்..

click me!