மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவதை அதிகம் பேர் விரும்புவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அடுத்த கர்நாடக முதல்வர் ஆவதற்கு மிகவும் பிரபலமான தேர்வாக இருப்பதாக என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜகவின் தற்போதைய பசவராஜ் பொம்மை இரண்டாவது இடத்தில் உள்ளார், லோக்நிதி-சென்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைடீஸ் (சிஎஸ்டிஎஸ்) உடன் இணைந்து என்டிடிவி நடத்திய சிறப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள் இவ்வாறு கூறுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் தெரியவரும். அதற்கு முன்னதாக பலவிதமான பிரச்சினைகளில் கர்நாடகாவில் மக்களின் மனநிலையை அளவிடுவதற்கு இந்த சர்வே முயல்கிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, வயதான வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். ஆளும் பாஜகவின் முதல்வர் பொம்மை இளைய வாக்காளர்களால் அதிகம் விரும்பப்படுபவராக இருக்கிறார் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மூன்றாவவது இடத்தில் உள்ளதாகவும் என்றும் சொல்கிறது.
ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகளுக்கு தண்டனை! உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் நான்காவது இடத்தில் உள்ளதாவும் சர்வே தெரிவிக்கிறது. நான்கு முறை முதலமைச்சராக பதவி வகித்து, ஒரு முறைகூட பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாத பாஜகவின் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டில் பாஜக அவருக்குப் பதிலாக திரு பொம்மையை முதல்வராக நியமித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட எடியூரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
கருத்துக்கணிப்பிற்கு பதிலளித்தவர்களில் 56% பேர் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 38% பேர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் வாக்குப்பதிவு செய்வதாகக் கூறியுள்ளனர். 4% பேர் மட்டுமே முதல்வர் யார் என்பதை வைத்து வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர்.
காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை ஆதரிக்கும் வாக்காளர்கள் கட்சியை முக்கியக் காரணியாகக் கருதுகின்றனர். முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பாஜகவை விட காங்கிரஸ் சிறந்து விளங்குகிறது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸ் (35%) மற்றும் ஜேடிஎஸ் (3%) ஆகிய கட்சிகளை விட பாஜக (59%) அதிக ஊழல் நிறைந்து என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் (30%) மற்றும் ஜேடிஎஸ் (8%) ஐ விட பாஜக (59%) அதிகமாக வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் சர்வே சொல்கிறது.
Go First: திவாலான கோ பஸ்ட்! 3 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு